பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது பழனிச்சாமி பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கோபியிடம் ஹலோ சார் என பழனிச்சாமி கோபியிடம் பேசுகிறார் ஆனால் கோபி பாக்கியாவுக்கும் பழனிச்சாமிக்கும் திருமணம் நடக்கப்போகிறது என தவறாக நினைத்துக் கொண்டு கோபத்தில் இருக்கிறார்.
ஒரு வார்த்தை கூட இங்கிலீஷ் பேச தெரியல அந்த லேம்ப் போஸ்டோட கல்யாணமா என வயித்தெரிச்சலில் இருக்கிறார். வீட்டிற்கு உள்ளே வருகிறார் அப்பொழுது பழனிச்சாமியின் அம்மா மற்றும் ஈஸ்வரி இருவரும் பேசிக் கொள்கிறார்கள் அந்த சமயத்தில் இந்த கல்யாணம் நடந்துச்சுன்னா ரொம்ப சந்தோஷம் இதற்கெல்லாம் பாக்கியா தான் காரணம் என பழனிச்சாமியின் அம்மா கூற அதை கேட்டு விட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்.
ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் இவங்க மருமகள நல்லா மகள் மாதிரி பார்த்துப்பாங்க என கூறிக் கொண்டிருக்கிறார். உடனே ராமமூர்த்தி ஆமாமா மகள் மாதிரி பார்த்துப்பாங்க எனக் கூற ஈஸ்வரி என்னை குத்தி காமிக்கிறீர்களா நானும் மருமகளா நல்லா தான் பாத்துக்கிறேன் எனக் கூற ஆமா உன்னை யாரு சொன்னா நீயும் நல்லா தான் பாத்துக்குற என ராமமூர்த்தி கூறுகிறார்.
ஆனாலும் கோபி திருதிருன்னு முழித்துக் கொண்டு டென்ஷனில் இருக்கிறார் அந்த சமயத்தில் பாக்கியா மற்றும் செல்வி இருவரும் சமையல் கட்டில் இருக்கும் பொழுது கோபி திடீரென வந்து பாக்யா நீ பண்றது எதுவுமே நல்லா இல்ல அந்த பழனிச்சாமி எதுக்கு இங்க வரான் இந்த வயசுல எதுக்கு கல்யாணம் உடனே செல்வி சார் உங்களை விட ரெண்டு மூணு வயசு கம்மியா தான் இருப்பாரு நீங்களே ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அவர் ஒரே ஒரு கல்யாணம் தானே பண்ண போறாரு அதனால என்ன எனக் கூறுகிறார்.
கோபி ஓவராக போனதால் உடனே பாக்யா நீங்க யாரு என் பின்னாடியே எதுக்கு வரீங்க நான் என்ன பண்றேன் எது பண்றேன்னு எதுக்கு ஃபாலோ பண்றீங்க அடுத்த பொம்பளைய ஃபாலோ பண்றது தப்பா தெரியலையா? நான் நல்லபடியா சொல்லும்போதே ஓடிடுங்க அசிங்கப்பட்டு விடுவிங்க என திட்டுகிறார் உடனே கோபி ஓடி விடுகிறார்.
கோபி சென்று இனியாவிடம் கூற போகிறார் இனியாவோ பழனிச்சாமி அங்கிள் ரொம்ப நல்லவரு அவர் பத்தி பேசினா மெசேஜ் பண்றாரு பாத்தீங்களா என போனை எடுத்துக் கொண்டு செல்கிறார் இதனால் கோபி இன்னும் டென்ஷன் ஆகிறார் அந்த சமயத்தில் ராமமூர்த்தி வர பெரிய மனுஷன் தனமா நடந்துக்குங்க என ராமமூர்த்தி இடம் கோபி கேட்க உடனே குடிச்சிட்டு ரோட்டில் கிடக்கிற நாலு காலில் நடந்து வர இதுல யார் பெரிய மனுஷன் நீ என்கிட்ட சொல்றியா என ராமமூர்த்தி கோபியை திட்டுகிறார்.
ஒரு வழியாக மெண்டலாக கோபி மாறிக் கொண்டிருக்கிறார் அடுத்த காட்சியில் ராதிகா மற்றும் கோபி இருவரும் ரூம் மேல இருக்க அப்பொழுது கோபி ஃபோனை தேடுகிறார். போன் இங்க தான் இருக்கு என ராதிகா எடுத்துக் கொடுக்கிறார். போனை பார்த்த கோபி இரண்டு மூன்று கால்கள் வந்துள்ளது இங்கதான் இருக்கேன் எதுக்கு மிஸ்டு கால் விட்டு இருக்க என கோபி கேட்க நான் வீட்டில் இருந்து பிக்கப் பண்றதுக்காக கூப்பிட்டேன் என கூறுகிறார் அஞ்சு பில்டிங் தாண்டிதான வீடு அங்கிருந்து ரெண்டு நிமிஷத்துல வந்துடலாம் நான் வந்தனா 20 நிமிஷம் ஆகும் என மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
உடனே ராதிகா எதுக்கு இப்ப மூச்சு விடாம பேசுறீங்க நான் தான் வந்துட்டேன் இல்ல முடிஞ்சிடுச்சு விட்டுடுங்க என கூறுகிறார் உடனே ராதிகா வீட்டில் என்ன விசேஷம் லட்டு எல்லாம் செஞ்சு வச்சு இருக்காங்க எல்லாரும் புது டிரஸ் போட்டு இருக்காங்க என கேட்க ஏதாவது கல்யாணமா என கேட்கிறார். உடனே கோபி ஆமா கல்யாணம்தான் பாக்யாவிற்கு கல்யாணம் தான் என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.