விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் கிளாசில் பாக்கியா, பழனிச்சாமி, லோபிகா மூவரும் இருக்கிறார்கள் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது லோபிகா எனக்கு இவ்வளவு நாள் பாடம் எடுத்தும் கத்துக்காதது போல் தெரிகிறது எனக் கூற அதற்கு பழனிச்சாமி நீங்க தான் கத்துக்கல நாங்க எல்லாம் நிறைய கத்துக்கிட்டோம் என கூற அதற்கு லோபிக அது வேணா உண்மைதான் சார்.
படிக்கணும்னு தோணுது ஆனா மூளைக்கு தான் எட்ட மாட்டேங்குது என்பது போல் கூறி விடுகிறார் அந்த சமயத்தில் தேங்காய் சாதம் அம்மா கேட்டாங்க என பழனிச்சாமி கூற அதற்கு நானே செய்து கொண்டு வருகிறேன் என கூறுகிறார். மற்றொரு பக்கம் கிச்சனில் அமிர்தா வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது எழில் வந்து டிஷ்யூ பேப்பரை உருட்டி அடித்து விளையாண்டு கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் பொழுது ஜெனி தண்ணி எடுப்பதற்காக கிச்சனுக்கு வருகிறார் அப்பொழுது பார்த்து விடுகிறார்.
உடனே ஜெனி பதறி அடித்துக் கொண்டு நான் எதையும் பார்க்கவில்லை கிச்சனை எடுக்க வந்தேன் என உலறுகிறார் பிறகு தண்ணீர் எடுக்க வந்தேன் கிச்சனுக்கு என சொல்லிவிட்டு ஓடிவிடுகிறார். அதனால் அமிர்தா ஏழிலை திட்டுகிறார் கிச்சன்ல யார் ரொமான்ஸ் பண்றது என கூறுகிறார். அடுத்த காட்சியில் பாக்கியா தேங்காய் பால் சாதம் செய்து கொண்டு பழனிச்சாமி வீட்டிற்கு செல்கிறார் அங்கு தேங்காய் பால் சாதத்தை கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது பழனிச்சாமியின் அம்மா ஒரு கோரிக்கை நிறைவேற்றிட இன்னொரு கோரிக்கை அப்படியே இருக்கு எனக்கு கூறுகிறார்.
அதற்கு எனக்கு புரியவில்லை என பாக்கியா கூற உடனே பழனிச்சாமியின் அம்மா இவன் திருமணம் பற்றி தான் பேசுகிறேன் என கூறுகிறார். உடனே ரெடி பண்ணிடலாம் என பாக்கியா கூறுகிறார் வீட்டிற்கு வந்த பாக்யா தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரிடம் பழனிச்சாமி திருமணம் பற்றி பேசும்பொழுது ராமமூர்த்தியின் நண்பர் சென்னை வந்துள்ளார் அதனால் அவரின் நண்பரிடம் பொண்ணு பார்க்க நாளைக்கு ஏற்பாடு செய்யலாமா என கேட்க சொல்லு என பாக்கியா ராமமூர்த்தியிடம் கூற உடனே ராமமூர்த்தியும் கேட்டு விடுகிறார்.
பொண்ணு வீட்டில் ஓகே சொன்னதால் பாக்கியா பழனிச்சாமிக்கு கால் செய்கிறார் அந்த சமயத்தில் கோபி வாசலில் நிற்கிறார் அப்பொழுது பாக்யா நாம ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது போல் பேசுகிறார் இதனை கோபி கேட்டுவிட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு என்னது திருமணமா? என அதிர்ச்சி அடைந்து நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.