என் வீட்டில் பஞ்சாயத்து பண்ண நீ யாரடி.. கமலாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோபி..

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் கைது செய்து அழைத்து செல்கிறார்கள் ஈஸ்வரியை அப்பொழுது பாக்கியா குடும்பம் நின்னு கதறி கொண்டு அழுகிறது. மேலும் அந்த சமயத்தில் கோபி என்னாச்சு என கேட்க கோபியை ராமமூர்த்தி பிடித்து அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் உன்னை மலை போல நம்பினாலே உன் மேல அவ்வளவு அன்பு வச்சிருந்தாலே அவளுக்கு செய்ற நன்றி கடனாக இது என அழுகிறார்.

நாங்க ரெண்டு பேரும் வேணா செத்துட்டா நீ நிம்மதியா இருப்பியா என கோபியை பார்த்து ராமமூர்த்தி கேட்கிறார் இருந்தாலும் கோபி என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க என கேட்க கேஸ் கொடுத்தது பற்றி கூறுகிறார்கள் உடனே கோபி அதிர்ச்சி அடைகிறான் அது மட்டும் இல்லாமல் என் குழந்தை மேல சத்தியமா நான் எதுவுமே செய்யல என சத்தியம் பண்ண செல்ல உடனே தடுத்து நிறுத்தி எழில் மறுபடியும் போய் சத்தியம் பண்ணலாம்னு பாக்குறீங்களா என கேள்வி எழுப்புகிறார்.

கண்ணு முன்னாடி நிக்காதீங்க தயவுசெய்து போயிடுங்க என கேட்கிறார்கள் உடனே ஈஸ்வரியை போலீஸ் அழைத்து செல்கிறது பின்னாடியே பாக்கியா குடும்பம் செல்கிறது கோபி வீட்டிற்கு சென்று கதவை ஓங்கி தட்டுகிறார் அப்பொழுது ராதிகா கதவை திறக்க என் அம்மா மேலே கேஸ் கொடுத்து இருககியே உனக்கெல்லாம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே கிடையாதா என கோபி கேட்கிறார்..

மேலும் உடனே ராதிகா திருத்திரு என முழிக்க ராதிகாவின் அம்மா கமலா வருகிறார் இதுக்கும் ராதிகாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை நான் தான் கேஸ் கொடுத்தேன் என்றால் முந்திரிக்கொட்டை மாதிரி பேச உடனே கோபி உன் வேலை என்னவோ அதை பார்க்க வேண்டியதுதானே என் குடும்பத்தில் பஞ்சாயத்து பண்ண நீ யாரு எனக்கு கேள்வி எழுப்புகிறார் உடனே பார்த்தியா ராதிக நான் யாருன்னு கேக்குறாரு உன்ன பத்தி கொஞ்சம் கூட அவருக்கு அக்கறையே கிடையாது என பேசுகிறார் கமலா.

உடனே அடிப்பதற்கு கை ஓங்குவது போல் அங்க என்ன பேச்சு இங்க நான் பேசிகிட்டு இருக்கேன் என் குடும்பத்தில் பஞ்சாயத்து பண்ண நீ யாரு அது எங்களோட குழந்தை அதை பத்தி நாங்க பேசி தீத்துக்கிறோம் நீ எதுக்கு தேவையில்லாம மூக்கை நுழைக்கிற  அந்த சமயத்தில் மையு வருகிறார் உடனே கோபி அமைதியாக மாறுகிறார் என் அம்மாவுக்கு மட்டும் போலீஸ் ஸ்டேஷன்ல ஏதாவது ஆச்சி உங்களை உயிரோட விடமாட்டேன் என கூறிவிட்டு செல்கிறார்.

போலீஸ் ஸ்டேஷன் ஈஸ்வரி விசாரிக்க உள்ளே அழைத்துச் செல்கிறார்கள் ராமமூர்த்தி கதறுகிறார் அது மட்டும் இல்லாமல் போலீசை பார்த்து கோபியும் பேச வருகிறார் அப்பொழுது எதுவாயிருந்தாலும் கோர்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிடுகிறார்கள் நீதிமன்றமாமே இனி அவர் கெதி என அதிர்ச்சடைந்து ராமமூர்த்தி கதறி அழுகிறார் உடனே வீட்டிற்கு ராமமூர்த்தி பாக்கியா எழில் செழியன் என அனைவரும் வருகிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.