baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ஜெனி செழியன் வந்தவுடன் இந்த வீட்டுக்கு நம்மளால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என செழியன் இடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஜெனி. அதற்கு செழியன் நானும் அத பத்தி தான் யோசித்துக் கொண்டிருந்தேன் இதே முன்னாடி மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் ஃபுல் பணத்தையும் நானே செட்டில்மெண்ட் பண்ணி இருப்பேன் நாளைக்கு அக்கவுண்ட்ல எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துட்டு எடுத்துட்டு வரேன் எனக் கூறி விடுகிறார்.
அடுத்த காட்சியில் காலையில் ஜெனி, அமிர்தா, பாக்கியா, செல்வி என அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பாக்யா பணத்தைப் பற்றிய யோசித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் எழில் எங்கே என கேட்கும் பொழுது நேற்றிலிருந்து இன்னும் வீட்டுக்கு வரவில்லை என கூறுகிறார்.அந்த சமயத்தில் எழில் வருகிறார் அப்பொழுது உனக்கு நூறு ஆயுசு என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கடா போயிருந்த என பாக்யா விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது பழனிச்சாமி சார் சொன்ன அந்த வேலைய தான் பார்க்க போயிருந்தேன் என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் 5 லட்சத்தை எடுத்துக் கொடுத்து இந்தாம்மா அந்த ஆள் மூஞ்சில விட்டு எரியுமா என கூறுகிறார். நீ ஏண்டா ரெடி பண்ணனும் நானே பாத்துக்கிறேன் எனக் கூற நீ மட்டும் ரெடி பண்ணிட்டு இந்த வீட்ல இருக்கலாம் என்று பார்க்கிறாயா என கிண்டலாக பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் மீதி 5 லட்சமும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வந்து விடும் என ஆறுதல் கூறுகிறார் பாக்யாவிடம்.
அடுத்த காட்சியில் ஜெனி செழியனிடம் என்னாச்சு செழியா பணத்த பத்தி கேட்டு இருந்தேன்னே என கேட்க பணம் எடுக்க தான் பேங்க் போயிட்டு இருக்கேன் என ஜெனியிடம் கூறுகிறார், செழியன் வந்து வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார் அப்பொழுது எழில் இன்னும் ரெண்டு நாள்ல மொத்த பணத்தையும் கொடுத்து விடலாம் டா என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஏன்டா என்ன மட்டும் எதிலுமே சேர்த்துக்க மாட்டேங்கிறீங்க என செழியன் கேட்கிறார்.
பிறகு இன்னும் ரெண்டு நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது சீக்கிரம் கொடுக்கணும் என கூறிவிட்டு 5 லட்சம் பணத்தை பாக்கியாவிடம் செழியன் கொடுக்கிறார். இதனால் ஆனந்த கண்ணீரில் பாக்கியா மிதக்கிறார் இதைவிட என்ன வேண்டும் என ராமமூர்த்தி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். பணம் ரெடி பண்ணியாச்சு என்பது தெரியாமல் ராதிகா மற்றும் கோபி இருவரும் பாக்யாவை நக்கலாக பேசுகிறார்கள் 10,000 கூட ரெடி பண்ண முடியாது என மிகவும் கேவலமாக பேசுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் வீட்டை விட்டு மொத்தமாக காலி பண்ண போறீங்களா இல்ல நீ மட்டும் போறியா இல்ல உங்க கும்பலை கூட்டிட்டு போறியா என கோபி முன்னாடியே ராதிகா பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் நீ தான் ரோசக்காரி ஆச்சே என மிகவும் கீழ்த்தரமாக பேசுகிறார். போதாத குறைக்கு கோபியும் இவ எங்க பணத்தை ரெடி பண்ண போற என தன்னுடைய பங்கிற்கும் கோபி பேசுகிறார் என்ன பேசாம அமைதியா இருக்க பணத்தை ரெடி பண்ணி இருந்தா இந்நேரம் எவ்வளவு பேசுவ என கோபி பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.