baakiyalakshmi january 20 : பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ராமமூர்த்தி இருவரும் சோபாவில் உட்கார்ந்து கொண்டு செழியன் இன்னும் வரவில்லையே என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் உடனே கோபி போனவங்களாவது கால் பண்ணி என்னன்னு சொல்லணும்ல்ல என பாக்கியாவை சாடமடையாக திட்டுகிறார் உடனே ராமமூர்த்தி எனக்கு போன் பண்ணி சொல்லிட்டா வந்துட்டு இருக்கா என கூறுகிறார்.
உடனே பாக்யா வருகிறார் அப்பொழுது செழியன் எங்கே, நீ மட்டும் தனியா வர அவனுக்கு எதொ வேலை இருக்குன்னு போயிருக்கான் வந்துருவான் என பேசுகிறார். உடனே பாக்கியா ராமமூர்த்தியிடம் தனக்கு கான்ட்ராக்ட் கிடைத்துள்ளதை கூறுகிறார் மினிஸ்டர் காண்ட்ராக்ட் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அது மட்டுமே இல்லாமல் இனியாவும் அம்மாவுக்கு கங்கிராட்ஸ் சொல்லிவிட்டு புகழ்ந்து பேசுகிறார்.
அடுத்த காட்சியில் பாக்கியாவின் டீம் வருகிறது அப்பொழுது தனக்கு ஆர்டர் கிடைத்ததை கூறுகிறார் பாக்யா அது மட்டுமில்லாமல் பல லட்சம் பேருக்கு சமைக்க வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது கோபி எட்டி பார்க்கிறார் இங்க வந்தாலும் இவங்க தொலை தாங்க முடியலையே என உள்ளே போகிறார்.
அடுத்த காட்சியில் ராமமூர்த்தி பாட்டி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது குன்னக்குடியில் இருந்து இருவர் வருகிறார்கள் அப்பொழுது அது ராதிகாவின் உறவினர்கள் என தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா வந்து அண்ணா வாங்க அண்ணா உட்கார வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்.
அதே போல் அந்த பக்கம் ஜெனியின் குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக ஜர்ஜ் போய்கூறிவிட்டு வந்துள்ளார் ஜெனியின் அப்பா இது தெரிந்த ஜெனி இது நாம மட்டும் எடுக்கற முடிவு கிடையாது செழியனும் அவங்க ஃபேமிலியும் சேர்ந்து தான் எடுக்கணும் இது ரொம்ப தப்பா இருக்கு என பேசுகிறார் உடனே உன் வாழ்க்கையில் இனிமே செழியன் கிடையவே கிடையாது என திட்டுகிறார்.
அடுத்த காட்சியில் ராதிகா அண்ணன் பாக்கியாவை பார்த்து இவங்க யார் என ராதிகாவிடம் ராதிகா அண்ணன் கேட்க அது வந்து அது வந்து என முழித்துக் கொண்டிருக்கும் பொழுது ராமமூர்த்தி அவ என் மகள் என கூறுகிறார் உடனே பாக்கியா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார் வந்தவர்கள் திருமணத்திற்கு அழைத்து விட்டு செல்கிறார்கள்.
சொல்லி அடித்த கில்லி.. கேப்டன் மில்லரை வீழ்த்திய அயலான்.. ஏழு நாட்கள் வசூல் விவரம் இதோ..
பிறகு பக்கத்து வீட்டு ஆன்ட்டி வந்து செழியனக்கும் ஜெனிக்கும் ஏதாவது பிரச்சனையா என கேட்கிறார் அதெல்லாம் ஏதும் கிடையாது எனக் கூற அதற்கு அவர் இல்ல உங்களுக்கே தெரியாம அவங்க பேர் வைக்கிறாங்களே என கூறுகிறார் இதனால் ராமமூர்த்தி அதிர்ச்சடைகிறார் உடனே அந்த ஆன்ட்டி போனவுடன் செழியன் என்னதான் வேணும்னு ஒதுக்கிட்டாங்க இப்ப என்னுடைய மகள் விஷயத்திலேயே என்ன ஒதுக்குகிறார்களா என சோகமாக வீட்டுக்குள்ளே போகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.