செழியனை மாட்டி விட பார்த்த மாலினி.. கேன்டீன் கையை விட்டு போயிடுச்சா பாக்கியாவை நக்கல் பண்ணும் கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakashmi september 30
Baakiyalakashmi september 30

Baakiyalakshmi serial September 30 : இன்றைய எபிசோடில் கேன்டீன் போனதை நினைத்து பாக்யா இன்னும் வருத்தமாகவே இருக்கிறார் அப்பொழுது எழில் வெளியே போயிட்டு வீட்டுக்கு வந்ததும் இன்னும் அதை பத்தியே நினைச்சிட்டு இருக்கியா, விடுமா வேற வேலை பார்த்துக்கலாம் என்று சொல்ல என்ன விட்டுட்டு போனவங்க..

நான் நல்லா இருக்க கூடாதுன்னு நினைச்சவங்க முன்னாடி எல்லாம் அந்த வேலையால் தலை நிமிர்ந்து நடந்தேன் இப்ப எனக்கு கஷ்டமா இருக்கு என்று சொல்லி வருத்தப்படுகிறார் பிறகு எப்படியும் நீ சாப்ட்டு இருக்க மாட்ட உனக்கு போய் நான் தோசை ஊத்தி எடுத்துட்டு வரேன்னு சொல்லி தோசை எடுத்துட்டு வந்து அம்மாவுக்கு ஊட்டி விடுகிறார்.

அடுத்து செழியன் மாலினி உடன் இருக்கிறார் அப்பொழுது பாக்யா போன் பண்ணி எங்க இருக்க என்று கேட்க ஆபீஸ்ல தான் என்று செழியன் சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மாலினி அங்கு வந்து ஹாட் வாட்டரா கூலிங் வாட்டர் வேணுமா என்று செழியனிடம் கேட்பதை பாக்யா போனில் காதில் வாங்கிக் கொண்டு யார் அங்க பேசுறது என்று கேட்க செழியன் ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க என்று பொய் சொல்கிறார்.

பிறகு வீட்டிற்கு வந்ததும் பாக்கியா உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும் நீ பண்றது கொஞ்ச நாளா சரி இல்ல நீ ஏதோ திருட்டு வேலை செய்ற நான் உன்கிட்ட போன் பேசும் போது பக்கத்துல பேசுனது யாரு என பாக்கியா செழியனை துருவி துருவி கேள்வி கேட்கிறார் ஆனால் செழியன் நான் எந்த தப்பும் பண்ணல என்று சமாளித்து விடுகிறார்..

அடுத்து கணேஷ் உடைய அப்பா அம்மா கணேஷ் அமிர்தாவை கண்டுபிடிக்க தீவிரமா இருக்கான், நமக்கு அமிர்தா உடைய வாழ்க்கையும் முக்கியம் அதே சமயம் நம்ம பையனுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சி அவன் கஷ்டப்படக்கூடாது.. அதனால் எழில் கிட்ட கணேஷ் வந்தத பத்தி சொல்லலாம் எழில் புரிஞ்சுபாரு என்று கணேஷ் உடைய அப்பா சொல்கிறார்.. அடுத்து செல்வியும் பாக்கியாவும் ரோட்டில் நடந்து போகின்றனர்.

அப்பொழுது கோபி வழி மறைத்து என்ன கேண்டீன் கையை விட்டு போயிடுச்சா, உன் இஷ்டத்துக்கு ஆடின, டக்கு டக்குனு வளந்திடலாம்னு நெனச்ச இல்ல  இப்ப என்ன பண்ணப் போற என பாக்யாவை நக்கலாக பேசுகிறார் அதற்கு பாக்யா திரும்பவும் நான் கேண்டீன் நடத்துவேன் பழையபடி இருப்பேன் என்று சவால் விடுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது