இத்தனை நாளா நடிச்சிட்டு இருந்தீங்களா ஈஸ்வரி.. பாக்யாவை இந்த கிழி கிழிக்கிறீங்க.. உச்சகட்ட சந்தோஷத்தில் கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi september 29
Baakiyalakshmi september 29

Baakiyalakshmi September 29 : இன்றைய எபிசோடில் கணேஷ் அவங்க அப்பா அம்மாவிடம் நீங்க அமிர்தா பற்றிய விஷயத்தை என்கிட்ட மறைக்கிறீங்க அவ சென்னையில் தானே இருக்க நான் போய் எவ்வளவு மாசம் ஆனாலும் அவளை கண்டு பிடிச்சுட்டு வரேன் என்று சபதம் போடுகிறார்.. அடுத்து பாக்கியா கேன்டினை காலி பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது பாக்யாவுடன் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் அக்கா பாண்டிச்சேரியில் சமைச்சதுக்கு இன்னும் சம்பளமே கொடுக்கல போய் கேட்கலாமா என்று யோசிக்க செல்வி அக்காவே கேண்டீன் போயிடுச்சுன்னு மன வருத்தத்துல இருக்கு இந்த நேரத்துல போய் நீங்க பணத்தை கேட்கலாமா அதெல்லாம் அக்கா கண்டிப்பா தந்துடுவாங்க என்று சொல்கிறார்.

அடுத்து ராதிகாவும் அங்கு வந்து ஈஸ்வரி ஹோம் புட் என்கின்ற போடு மாட்டி இருக்கிறது இதையும் எடுத்துட்டு போங்க என்று சொல்ல பாக்கியா எமோஷனலாக போர்டை கழட்டுகிறார்.. பிறகு வீட்டிற்கு வந்தும் பாக்கியா கேன்டீன் போனதை பற்றியே நினைத்து கொண்டிருக்கும் பொழுது பாக்யாவுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் அங்கு வந்து அக்கா இனிமேல் மாசம் மாசம் எங்களுக்கு பணம் வராதா..

ஏதாவது மசாலா பேக்கிங் வேலை இருக்கா அக்கா என்று கேட்க, இனிமேதான் அத பத்தி எல்லாம் பாக்கணும், அப்படியே வேலை இருந்தாலும் நானும் செல்வியும் பார்த்துக்கிறேன் உங்களுக்கு கல்யாண ஆர்டர் ஏதாவது வந்தா மட்டும் சொல்றோம் என பாக்கியா சொல்கிறார்.

இதை கேட்ட ஈஸ்வரி யார் யாரெல்லாம் வீட்ல வந்து உன்னை கேள்வி கேட்கிறதா இருக்கு கொஞ்ச நஞ்ச ஆட்டமா நீ போட்ட.. டைவர்ஸ் ஆனதுக்கு அப்புறம் ஏதாவது ஒரு வேளைக்கு போய் வர வருமானம் போதும் என்று நினைக்காமல் உன் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்ட அதான் இப்ப அனுபவிக்கிற என்று பாக்யாவை குறை சொல்லுகிறார்.. அடுத்து கோபி ராதிகா வந்ததும் கேண்டின்ல என்ன ஆச்சு என்று கேட்க..

ஓட்டிங்ள பாக்யா தோத்துட்டாங்க கேன்டீன காலி பண்ணிட்டாங்க என்று சொன்னதும் கோபி சந்தோஷப்படுகிறார் இதுதான் நான் எதிர்பார்த்தேன், ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் ஒரு நல்லது நடந்திருக்கு, இந்த சந்தோஷத்தை கொண்டாடனும் மயூவ கூட்டிகிட்டு நம்ம மூணு பேரும் வெளியே போய் சாப்பிட்டு வரலாம் என்று கிளம்புகின்றனர் இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.