Baakiyalakshmi September 27 : இன்றைய எபிசோடில் ராதிகா பாக்கியாவிடம் கேண்டீன் ஆர்டர் கேன்சல் பண்ணியாச்சு, எல்லா பொருளையும் மூட்ட கட்டிட்டு கெளம்புங்க நீங்க சீக்கிரம் கிளம்புனா தான் அடுத்தவங்க வந்து சமைக்க முடியும் என்று சொல்ல, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று திரும்பத் திரும்ப பாக்யா கேட்பதால் ராதிகா கொஞ்சம் மனசு இறங்கி நாளைக்கு வேணும்னா ஒரு ஓட்டிங் நடத்தலாம், அதுல நீங்க தான் சமைக்கணும்னு நிறைய பேர் சொன்னா நீங்க இந்த கேட்டினை கண்டினியூ பண்ணலாம், இல்லனா கேண்டின விட்டு போயிடனும் என்று சொல்கிறார்..
பிறகு வீட்டில் ஈஸ்வரி. ஜெனி இல்லாம ரொம்ப போர் அடிக்குது வீடே அமைதியா இருக்கு பாக்யாவும் வேலை வேலைன்னு வெளிய போயிடுவதால வீட்ல யாருமே இருக்க மாட்டேங்கறாங்க என்று அமிர்தாவிடம் சொல்கிறார்.. அப்பொழுது அமிர்தா உடைய அம்மா அமிர்தாவுக்கு போன் பண்ணுகிறார்.. எப்படி இருக்க, நல்லா இருக்கியா நிலா பாப்பா நல்லா இருக்கா என்று கேட்டுவிட்டு உங்க மாமனார் மாமியார் போன் பேசுனாங்களா..
ஏதாவது சொன்னாங்களா என கணேஷ் உடைய அப்பா அம்மாவை கேட்க அமிர்தா அவங்க இப்பல்லாம் அதிகமாக பேசுறதில்ல அப்படியே பேசினாலும் பதட்டமாகவே பேசுறாங்க என்ன ஆச்சுன்னு தெரியல ஒருநாள் நேர்ல போய் பாக்கணும் என்று சொல்ல நீ அங்கலாம் போகாத உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு அதை மட்டும் நீ பாரு என அமிர்தாவிடம் சொல்லிவிட்டு அவங்க அம்மா போனை வைக்கிறார்.
பிறகு பழனிச்சாமி அம்மாவை பார்க்க பாக்கியா அங்கு வருகிறார் அப்பொழுது பழனிச்சாமி இடம் கேண்டின் ஆர்டர கேன்சல் பண்ணிடுவேன்னு ராதிகா சொல்றாங்க நாளைக்கு ஒரு ஓட்டிங் நடத்த போறாங்களாம் அதுல ஒர்க்கர்ஸ் எல்லாரும் நான் சமைக்கலாம்னு சொன்னா தான் அந்த கேட்டின தொடர முடியும் இல்லனா கேன்டீன் கைமாறிடும் என்று வருத்தமாக சொல்ல உங்க கையால சாப்பிட்ட எல்லோருக்கும் உங்க சாப்பாடு ரொம்ப பிடிக்கும்..
அதனால நீங்க தான் சமைக்கணும்னு சொல்லுவாங்க எத பத்தியும் கவலைப் படாதீங்க நல்லதே நடக்கும் என்று சொல்கிறார்.. பிறகு வீட்டிலும் பாக்கியா கேட்டினில் நடந்ததை சொல்ல ஈஸ்வரி, ராமமூர்த்தி எல்லோரும் நீ தான் அந்த கேண்டின திரும்பவும் நடத்துவ, நீ ஓட்டிங்க்ல ஜெயிச்சு ராதிகா முஞ்சுல கரிய பூசுவ என்று ஆறுதலாக பேசுகின்றனர்.
அடுத்து இரவு எல்லோரும் தூங்கும் போது கணேஷ் அமிர்தாவை பத்தி ஏதாவது தகவல் கிடைக்குமா என பழைய பெட்டியை எல்லாம் எடுத்து அதில் உள்ள போட்டோக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது கணேஷின் அப்பா அம்மா வெளியே ஏதோ சத்தம் கேட்குது என பார்க்க எழுந்து வருகின்றனர். இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது