பழனிசாமியால் போலீசிடம் இருந்து தப்பித்த குடும்பத்தினர்.. உண்மை தெரிந்து கோபியை வெளுத்து விட போகும் பாக்கியா

Baakiyalakshmi september 18

Baakiyalakshmi september 18 : இன்றைய எபிசோடில் கோபி பாக்யாவுடைய லைசென்சை திருட்டுத்தனமாக எடுத்து வைத்துக்கொண்டு அவரது பிரண்டு கிட்ட பாக்கியா தனியாக கஷ்டப்படட்டும், என்னை என் குடும்பத்தில் இருந்து பிரிச்சு எவ்வளவு கஷ்டப்படுத்தினால் என்று ஹோட்டலில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதனை அங்கு வேறு ஒரு வேலையாக வந்த பழனிச்சாமியும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்து பாக்யாவிடம் போலீஸ் லைசன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகுது டைம் ஆச்சு வாங்க ஸ்டேஷனுக்கு போகலாம் என்று கூப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர். பிறகு கோபி லைசென்ஸ் இல்லாமல் அவள் தவிக்கட்டும் அவளை ஜெயில்ல..

பிடிச்சு போட்டா கூட எனக்கு எந்த கவலையும் இல்லை என்று அவரது நண்பரிடம் சொல்லை அவர் பாக்கியா உன் பொண்டாட்டி இல்லையா என்று கேட்க ரோட்டில் என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லி அசிங்கப்படுத்தினால அவ என் முன்னாள் பொண்டாட்டி கூட இல்ல என்று சொல்லிவிட்டு பாக்கியா லைசன்ஸ் இல்லாம கஷ்டப்படட்டும் என லைசன்ஸ கோபி கீழே கசக்கி தூக்கி போடுகிறார்.

இதை பழனிச்சாமி பார்த்துக் கொண்டிருக்கிறார்.. கோபி சென்றதும் பழனிச்சாமி அந்த லைசன்ஸ போட்டோ எடுத்து இனியாவுக்கு அனுப்பி போன் பண்ணி நான் உனக்கு போட்டோ அனுப்பி இருக்கேன் பாருமா என்று சொல்ல இனியா அதை பார்த்துவிட்டு லைசன்ஸ் கிடைச்சிடுச்சு என்று சொல்வதும்..

Baakiyalakshmi
Baakiyalakshmi

போலிஸ் அதை பார்த்துவிட்டு சிசிடிவி ஃபுட்டேஜ்லையும் உங்க மேல தப்பு இல்ல நீங்க பொறுமையா தான் வந்து இருக்கீங்க என்று போலீஸ் விட்டுவிட்டார். பாக்யா, செல்வி, இனியா, ஈஸ்வரி எல்லோரும் பிறகு காரில் ஊருக்கு கிளம்புகின்றனர் அப்பொழுது கோபி போன் பண்ணி என்ன இனியா கிளம்பிட்டியா என்று கேட்க வந்துட்டு இருக்கோம்..

Baakiyalakshmi serial

டாடி நானும் அம்மா எல்லாருமே தான் வரோம் கடைசி நேரத்துல லைசென்ஸ் பழனிச்சாமி சார் போட்டோ எடுத்து அனுப்புனர் அதனால அம்மா மேல எந்த தப்பும் இல்லை என்று போலீஸ் விட்டுட்டாங்க என்று சொல்வதும் கோபி ஷாக் ஆகி இந்த பழனிச்சாமி எங்கிருந்து வந்தான் பாக்கியா வந்துட்டாலே என்ன புலம்புகிறாள் இதோடு எபிசோட் முடிந்துள்ளது..