கோபியிடம் திமிராக பேசிய பாகிக்யா.. வர வழியில் பிரச்சனை இருக்கும் போலயே – பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi september 14
Baakiyalakshmi september 14

Baakiyalakshmi September 14 : இன்றைய எபிசோடில் ஹோட்டலில் புதுப்புது டிஷ் ஆர்டர் பண்ணி பாக்கியா இனியா எல்லோரும் நல்லா இருக்கு என்று சாப்பிடுகின்றனர். பிறகு அமிர்தா கணேஷ் உடைய அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி எப்படி இருக்கீங்க என்று கேட்டுவிட்டு எனக்கு மனசு ஒரு மாதிரி இருக்கு இதுவரையும் கனேஷ் என் கனவுல வந்ததே இல்லை..

ஆனால் முதல் முறையா இப்ப என் கனவுல வந்தாரு அதுவும் என்னை தொரத்துற மாதிரி கனவு வந்தது என நடந்தவற்றை சொல்கிறார். அதற்கு அவர்கள் அப்படியே கணேஷ் என் கனவுல வந்தாரு என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது எழில் அதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க கணேஷ் அமிதா நல்லா இருக்கணும்னு..

தான் நினைப்பாரு அவரு என்ன பண்ண போறாரு என்று பேசும்பொழுது கணேஷ் அங்கு வந்ததால் சரி நான் போன வச்சுடறேன் அப்புறம் பேசுறேன் என்று அவர்கள் போனை வைத்து விட்டனர். அங்கு வந்த கணேஷிடம் தெரிஞ்ச ஒருத்தவங்க கிட்ட அமிர்தாவை பத்தி கேட்டுக்கிட்டு இருந்தோம் என சொல்கின்றனர்.

பிறகு பாக்யா செழியனுக்கு போன் பண்ணி எங்க இருக்க ஜெனியை போய் பார்த்தியா, வளைகாப்பு நடக்கறதுக்கு முன்னாடி ஜெனி நம்ம வீட்லயே இருக்கட்டும்ன்னு அப்படி அழுத இப்ப போய்  ஒரு நாள் கூட ஜெனியை போய் பார்க்கல நீ ஜெனி வீட்டுக்கு போய் பாரு என்று சொல்வதால் சரி என் ஜெனி வீட்டுக்கு போகிறார்.

அங்கு ஜெனி எனக்கு பதட்டமா இருக்கு என் கூடவே இரு என்று சொல்வதற்கு சரி  இங்கே இருக்கேன் என பேசிக் கொண்டிருக்கிறார் அப்போது பெரிய எழுத்து மாலினி போன் பண்ணுகிறார் அந்த போனை கட் பண்ணி விடுகிறார்.. அடுத்து பாக்யா ஈஸ்வரி எல்லோரும் நாளை காலையில ரூம விட்டு சீக்கிரம் கிளம்பி ஊருக்கு போனோம் என்று சொல்ல எல்லோரும் ஊருக்கு போகணுமா என்று வருத்தப்படுகின்றனர்.

பிறகு அடுத்த நாள் காலையில் கோபி இனியாவுக்கு போன் பண்ணி  உங்க அம்மா கிட்ட குடு என்று சொல்ல இனியா போனை கொடுத்ததும் பாக்யாவிடம் கோபி போகும் போது எவ்வளவு பிரச்சனை பண்ணிட்டு போன இப்ப வரும்போது அந்த மாதிரி நிறைய பிரச்சனை பண்ணாத என்று சொல்ல, பிரச்சனை வந்தா தலைய எடுத்துடுவீங்களா என்ன பண்ணுவீங்க என பாக்கியா திமிராக பேசுகிறார் இதனுடைய எபிசோட் முடிந்துள்ளது…