Baakiyalakshmi October 7 : இன்றைய எபிசோடில் பாக்கியா ஜெனி உடைய அம்மாவிடம் ஜெனிய டிஸ்சார்ச் பண்ணதும் நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் என்று கேட்க அவர் இல்ல நானே காலேஜ் லீவு போட்டு பாத்துக்கிறேன் என்று சொல்கிறார், பிறகு பாக்கியா தனியா பாப்பாவ பாத்துக்குறது ரொம்ப கஷ்டம் எங்க வீட்ல நானு, அத்தை, அமிர்தா, செல்வி என எல்லோரும் இருக்கோம் நாங்க பாத்துக்குறோம் என்று சொல்கிறார்.
பிறகு செழியனும் ஜெனி எங்க வீட்லயே இருக்கட்டும் அப்பதான் நான் நினைச்ச நேரத்துக்கு ஜெனியவும் பாப்பாவையும் பார்க்கலாம் என்று சொல்கிறார்.. அடுத்து வீட்டிற்கு போனதும் பாக்யாவிடம் கேட்டரிங் ஆர்டர் பார்க்க போனீங்களே என்னாச்சு என்று அமிர்தா கேட்கிறார் உடனே ஈஸ்வரி அங்கையும் ராதிகா ஏதாவது வேலை பார்த்துட்டாளா என்று கேட்க..
பாக்கியா இப்ப வேலை பார்த்தது ராதிகா இல்ல உங்க பையன் கோபி தான் அவர்தான் அந்த ஆபீஸ் மேனேஜர் கிட்ட பேசி எனக்கு வேலை தராத மாதிரி பண்ணிட்டாரு என்று சொல்கிறார். இதை கேட்டு ராமமூர்த்திஎழில் போன்றவர்கள் கோபப்படுகின்றனர் ஆனால் ஈஸ்வரி எல்லாத்துக்கும் காரணம் நீ தானே, பேசாம அவன் கூட இருந்திருந்தால் உனக்கு இவ்வளவு கஷ்டம் வந்திருக்குமா..
கோபி கூட இருந்தப்ப சந்தோஷமா தானே இருந்த, திடீர்னு நீ பாட்டுக்கு போய் டிவைஸ் கொடுத்துட்டு வந்துட்ட, அதனாலதான் இப்ப கஷ்டப்படுற என்று பேசுகிறார்.. பிறகு கணேஷ் போரூரில் அமிர்தா தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பக்கத்தில் உள்ளவர்களிடம் இங்கு அமிர்தான்னு யாராவது இருக்காங்களா என்று கேட்கிறார்.
அப்பொழுது ஒருவர் ஆமா அவங்க அப்பா அம்மா கூட இருந்து காலேஜ் போயிட்டு இருந்தாங்க, அவங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் வேற இடத்துக்கு போய்ட்டாங்க என்று சொல்கிறார் இதைக் கேட்டு கணேஷ் ஏற்றுக் கொள்ள முடியாமல் அமிர்தா இன்னொரு கல்யாணம் எல்லாம் பண்ணி இருக்க மாட்டா இவங்க ஏதோ பொய் சொல்றாங்க என்று நினைக்கிறார்.
பிறகு அமிர்தா உடைய தோழி ஒருவர் வருகிறார் அவரிடம் அமிர்தாவை பற்றி கேட்பதற்கு அமிர்தா குரோம்பேட்ல இருக்காங்க, எழில் கூட கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் இந்த வீடு மாறி எழில் வீட்டுக்கு போய்ட்டாங்க இது உங்க அப்பா அம்மாவுக்கே நல்லா தெரியுமே அவங்க தானே அமிர்தா கூட இருந்தாங்க..
அவங்க கிட்ட கேட்டிருந்தாலே சொல்லி இருப்பாங்க என்று கேட்க கணேஷ் நான் அப்பா அம்மா கிட்ட கேட்ட அவங்க அமிர்தாவை பற்றி எதுவும் சொல்லல என்று சொல்ல பிறகு அமிர்தாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என பித்து பிடித்த போல் யோசித்து கொண்டே கணேசன் இருக்கிறார் இதோட எபிசோடு முடிந்துள்ளது