பொண்டாட்டி புள்ள வேணாம்.. மாலினியுடன் நெருக்கம் காட்டும் செழியன்.! காசு கட்டாமல் அசிங்கப்பட்டு நிற்கும் கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakashmi
Baakiyalakashmi

Baakiyalakshmi October 5 : இன்றைய எபிசோடில் ஜெனிக்கு குழந்தை பிறந்துள்ளதால் செழியன்  ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார் அப்பொழுது மாலினி செழியனுக்கு போன் பண்ணி எங்க இருக்கீங்க என்று கேட்க நான் தான் பிஸியா இருக்கேன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா ஜெனிக்கு குழந்தை பிறந்திருக்கு என்று மாலினியிடம் சொல்ல..

மாலினி அப்படியா, அப்போ என்ன பாக்க நீங்க வர மாட்டீங்களா உங்க குழந்தை கூட தான் இருப்பீங்களா என்று கேட்க எனக்கு வேலை இருக்கு என்று செழியன் போனை வைத்து விட்டார் பிறகு மாலினி நீங்க இப்ப என்ன பாக்க வரலன்னா நான் என் கையை அறுத்துப்பேன் என்று வாய்ஸ் மெசேஜ் பண்ணி அனுப்புகிறார்.. இதைக் கேட்டு விட்டு செழியன் பாக்யாவிடம் அம்மா எனக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு..

காசு, பணம் சேர்த்து வைக்கிறதெல்லாம் ஓல்டு மாடல்.. வீடு முழுக்க கார்களை குவித்து வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா

நான் போய் ஆகணும்மா உடனே திரும்ப வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு மாலினியை பார்க்கப் போகிறார்.. மாலினி என்னால் உங்கள பாக்காம இருக்க முடியல நீங்க இங்கேயே இருங்க என்று செழியன் தோளில் சாய்ந்து அழுகிறாள்.. செழியனும் இரவு அங்கு இருந்துவிட்டு காலை விடிந்ததும் நான் ஹாஸ்பிடலுக்கு போய் ஆகணும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்..

அடுத்து பேங்கில் இருந்து ரெண்டு பேர் பாக்யா வீட்டுக்கு வந்து இங்க கோபிநாத் இருக்காரா என்று எழில் இடம் கேட்கின்றனர். முதலில் எழில் கோபின்னு இங்க யாரும் இல்ல என்று சொல்லிவிட்டு பிறகு ஏன் கோபிநாத்தை கேக்குறீங்க என்று கேட்க அவர் ரெண்டு மாசமா கிரிடிட் கார்டு பணம் கட்டவே இல்லை என சொல்வதும் உடனே எழில் அப்படியா விஷயம், இங்கிருந்து நாலாவது வீட்லதான் அவர் இருக்காரு அங்க போய் பாருங்க என்று எழில் சொல்கிறார்.

பொண்டாட்டி புள்ள வேணாம்.. மாலினியுடன் நெருக்கம் காட்டும் செழியன்.! காசு கட்டாமல் அசிங்கப்பட்டு நிற்கும் கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

அங்கு போய் கோபிநாத்தை வெளியே வாங்க என்று சொல்ல கோபி பணம் கொஞ்ச நாள்ல கட்டிடுறேன்.. அதுக்குன்னு வீடு தேடி வருவீங்க, நீங்க போங்க என்று அனுப்பி வைத்துவிட்டார் பிறகு ராதிகா அவங்க யாரென்று கேட்க அதுவா கிரெடிட் கார்டு ரெண்டு வேணுமா என்று கேட்டாங்க அதெல்லாம் எனக்கு வேணாம்னு சொல்லிட்டேன் என பொய் சொல்கிறார் இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.