Baakiyalakshmi serial October 3 : இன்றைய எபிசோடில் ஜெனிக்கு பிரசவ வலி வந்து அவங்க அம்மா ஜெனிபர் ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கின்றனர்.. இந்த தகவலை செழியன் வீட்டில் சொல்ல பாக்கியா, ஈஸ்வரி, செழியன் மூன்று பேரும் பதறிப் போய் ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளனர்.
அப்பொழுது ஜெனி பிரசவ வலி தாங்க முடியாமல் கத்திக் கொண்டிருக்கிறார்.. நர்ஸ் அவங்களுக்கு பிரசவ வலி வருது, ஆனா குழந்தை பிறக்க டைம் ஆகுது என்று சொல்கின்றனர். ஜெனி கத்துவதை பார்த்து செழியனும் குழந்தை பெற்றுக்கொள்வது இவ்வளவு கஷ்டமா, இது தெரிஞ்சிருந்தா நாங்க குழந்தை பெத்துக்கணும்னு நினைச்சு இருக்கவே மாட்டோம் ஜெனி பாவம் என்று புலம்புகிறார்.
வீட்டில் இனியா தாத்தாவிடம் என்ன ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க நான் ஜெனி அக்காவ பாக்கணும் என்று சொல்ல தாத்தாவும் அமிர்தாவும் குழந்தை பிறந்ததும் நமக்கு சொல்லுவாங்க அப்பறமா போய் பார்த்துக்கலாம் என்று சொல்ல, இனியா நான் போய்யே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறது அப்பொழுது கோபி போன் பண்ண, அப்பாவிடம் ஜெனி அக்காவுக்கு இன்னைக்கு குழந்தை பிறக்கப் போகுது..
ஹாஸ்பிடலுக்கு போய் இருக்காங்க நம்மளும் அங்க போலாம் வாங்கப்பா என்று கூப்பிட, பிறகு கோபியும் இனியாவும் ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளனர்.. அப்பொழுது கோபியும் பாக்யாவும் சேர்ந்து செழியனை அழாதே என்று சமாதானப்படுத்துகின்றனர்.. அதைப் பார்த்து ஈஸ்வரி புருஷன் பொண்டாட்டி புள்ளைன்னு எவ்வளவு அழகா இருக்கு, இப்படியே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறார்.
அப்பொழுது டாக்டர் பிரசவ அறையில் இருந்து வெளியே வந்து செழியனிடம் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு என்று சொல்ல எல்லோரும் ரொம்ப சந்தோஷப்படுகின்றனர். மேலும் கோபி சந்தோஷத்தில் செழியனை தூக்கி சுற்றுகிறார்.. அப்பொழுது செழியனுக்கு மாலினி போன் பண்ணுகிறார் அதனை செழியன் அட்டென்ட் பண்ணி நான் பிஸியா இருக்கேன்னு சொன்னனே ஏன் திரும்ப திரும்ப போன் பண்ற என கோபமாக பேசி விட்டு வைக்கிறார்.
பிறகு கோபி கடைக்கு போய் ஸ்வீட் வாங்கிட்டு வந்து ஹாஸ்பிடலில் உள்ள எல்லோருக்கும் கொடுக்கிறார்.. அடுத்து எல்லோரும் குழந்தையைப் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.. அப்பொழுது ராதிகா கோபிக்கு போன் பண்ணி எங்க இருக்கீங்க என்று கேட்க நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் செழியனுக்கு பாப்பா பொறந்திருக்கு..
ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இன்னைக்கும் நாளைக்கும் ஹாஸ்பிடல்ல தான் இருப்பேன் என்று சொல்கிறார் உடனே ராதிகாவோட அம்மா குழந்தையை பார்த்தமா வந்தமான்னு இருக்காரா, நீ போய் ஒரு ஃபார்மாலிட்டிக்கு குழந்தையை பார்த்துட்டு கோபியை கையோடு அழைச்சிட்டு வா என்று ராதிகாவிடம் சொல்கிறார் இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது..