அப்பாவை கொஞ்சம் கூட மதிக்காத இனியா.! ராதிகாவிடம் பொய் சொல்லிவிட்டு கோபி செய்யும் செயல்.! வசமா சிக்கபோற மாப்ள..!

baakiyalakshmi--may16
baakiyalakshmi--may16

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசொட்டில் பாக்கியலட்சுமி, எழில், செழியன் என அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது பாக்கியலட்சுமி நீங்க ரெண்டு பேரும் இப்படியே பேசிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும் கொஞ்ச நாள் பேசாம இருந்தது உங்களை பார்க்கவே நல்லா இல்ல என பாக்கியா எழிலையும், செழியனையும் பார்த்து கூறுகிறார்.

அந்த சமயத்தில் இனிய ஓடி வந்து பாக்யாவை கட்டிப்பிடித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார் அது மட்டும் இல்லாமல் எழிலிடமும் செழியன் இடமும் கை கொடுத்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது என்ன ஆச்சு என்னாச்சு என அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இனியா நான் ஸ்கூல்ல அஞ்சு பெஸ்ட் ஸ்டுடென்ட் லிஸ்டில் இருக்கிறேன் நாளைக்கு அதுக்காக சின்ன விழா வைத்து அன்னவுன்ஸ்மென்ட் பண்றாங்க .

அதுக்கு கண்டிப்பா எல்லாரும் போகணும் என கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இதற்கு முன்னாடி என்ன நல்லா படின்னு சொல்லிட்டு இருந்தாங்க அம்மா அது மட்டும் இல்லாம பெஸ்ட் ஸ்டுடென்ட் கோச்சிங் கிளாசுக்கு நான் செலக்ட் ஆகவில்லை என்று அம்மா வருத்தப்பட்டாங்க இப்ப ஆனா செலக்ட் ஆயிட்டேன் என சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கோபி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்த நாள் காலையில் கோபி ஜாக்கிங் போயிட்டு வீட்டிற்கு வரும் பொழுது இனியா படித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது இனியாவிடம் வந்து கோபி என்ன படித்துக் கொண்டிருக்கிறாய் என கேட்டு வீட்டு நேத்து ஏதோ ஸ்கூல் பங்க்ஷன் என்று சொல்லிக்கொண்டு இருந்தாயே நான் கேட்டேன் எனக் கூற உடனே இனியா ஆமாம் டாப் 5 ஸ்டுடென்ட் லிஸ்டில் வந்துள்ளதை கூறுகிறார்.

கோபி மிகவும் சந்தோஷப்படுகிறார் ஆனால் இனியா அவரிடம் பிடிகொடுக்காமல் யாரோ ஒருவரை போல் பார்க்கிறார் அடுத்த நாள் ஸ்கூலில் பாக்கியா, எழில், ராமமூர்த்தி தாத்தா என அனைவரும் செல்கிறார்கள் அப்பொழுது இனியாவை பற்றி புகழ்ந்து தள்ளுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஸ்கூல் டீச்சர் முதல் ஸ்டூடண்ட் வரை அனைவரும் இனியாவை பாராட்டி பேசுகிறார்கள் இது பாக்யாவிற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

அந்த சமயத்தில் கோபி ஸ்கூலுக்கு வந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது ராதிகா எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்? எங்கள ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு போங்க என ராதிகா கேட்க ஆனால் கோபி ஆபீஸ் விஷயமா போய்க்கொண்டிருக்கிறேன் ஆபீஸில் ஒருத்தர் பங்க்ஷன் அதுக்கு போறேன் என பொய் சொல்லிவிட்டு இனிய ஸ்கூலுக்கு வருகிறார்.

இனியா ஸ்கூலில் டாப் 5 மாணவர்களின் லிஸ்ட்டை ஒவ்வொருவராக கூறிக்கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இனியாவின் பெயரை கூறியதும் இனியா மேடைக்கு செல்கிறார் இனியா பேசு என அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள் இந்த சமயத்தில் கோபியும் வந்து விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.