பெத்த அம்மா என்று கூட பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே தள்ளிய கோபி.. கண்ணீர் சிந்தும் ஈஸ்வரி..

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஈஸ்வரியை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் பாட்டி ரொம்ப கஷ்டப்படுறாங்க அவங்க உடம்பு எப்படி இருக்கு என நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது எழில் வந்து கூப்பிடுகிறார், அது கூட தெரியாமல் பாக்யா பலத்த யோசனையில் இருக்கிறார் உடனே எழில் பாக்யாவை பிடித்து என்னம்மா ஆச்சு ஏன் இவ்வளவு கஷ்டப்படுற என கேட்கிறார்.

அதற்கு பாக்யா பாட்டிய நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்களை பார்க்கணும் போல இருக்கு என பேச கூட்டிட்டு வந்துடலாம் என கூறுகிறார் அதற்கு பாக்கியா நான் போய் பாத்துட்டு வந்தேன் அவங்க அங்க இல்லை  எனவும் பேசுகிறார். மற்றொரு பக்கம் ஹாஸ்பிடலில் இருந்து ராதிகா மற்றும் கோபி ராதிகாவின் அம்மா, மயு என அனைவரும் வீட்டுக்கு வருகிறார்கள் அப்பொழுது ஈஸ்வரியை  பார்த்து நீ இன்னும் இங்க தான் இருக்கியா என ராதிகாவின் அம்மா திட்டுகிறார்.

மேலும் குழந்தையை  அழிக்கும்னு நினைச்ச கொன்னுட்ட இன்னும் யார கொல்றதுக்காக இங்க இருக்க அடுத்தது ராதிகாவை போட்டு தள்ள பாக்குறியா என பேசுகிறார் அதற்கு ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து நான் எதுவுமே பண்ணல என கத்துகிறார் ஆனாலும் வீட்டில் உள்ளவர்கள் யாரும் நம்புவது போல் தெரியவில்லை நீங்கதான் குழந்தையை கொன்றீர்கள் என அனைவரும் பேசுகிறார்கள்.

இதனால் மனம் உடைந்த ஈஸ்வரி கோபி இடம் சென்று இவங்கெல்லாம் என்னென்னமோ பேசுறாங்க நீ நம்புறியா டா என கேட்கிறார் ஆரம்பத்தில் இருந்து குழந்தையை கலைக்க சொன்னது நீங்க தானே இப்பதான் உங்க ஆசைப்படி குழந்தை இல்லாம போச்சே அப்புறம் என்ன போய் உட்காருங்க என பேசுகிறார் அதற்கு ராதிகாவின் அம்மா இங்க உட்காருவதா அவங்க செஞ்ச வேலைக்கு இங்க எல்லாம் இடமே கிடையாது என்பது போல் பேச உடனே கோபி நீங்க நினைச்ச மாதிரியே குழந்தையை கொன்னுட்டீங்களே தயவுசெய்து இங்கிருந்து கிளம்புங்க என பேசுகிறார் ஈஸ்வரி இடிந்து ரூமுக்கு சென்று அழுது கொண்டு அனைத்து ஆடைகளையும் எடுத்து வைக்கிறார்.

பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வருகிறார் அப்பொழுது பாக்கியா யாரோ கூப்பிடுவது போல் தோன்ற உடனே வாசலை நோக்கி ஓடுகிறார் அங்கு யாரையும் காணவில்லை ஆனால் தூரத்தில் ஈஸ்வரி பெட்டியுடன் நிற்பதை பார்க்கிறார் உடனே ஈஸ்வரி அருகில் ஓடி என்னாச்சு அத்தை என கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

 

Exit mobile version