Baakiyalakshmi : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது ஆனால் சமீப காலமாக இதன் சுவாரஸ்யம் குறைந்து கொண்டே செல்கிறது இந்த நிலையில் சமீபத்திய எபிசோடில் பாக்கியா இங்கிலீஷ் கிளாஸ், காலேஜ் என செல்வதால் கேண்டினை சரியாக கவனிக்க முடியாமல் போகிறது.
இந்த நிலையில் செல்வி திடீரென சாப்பாட்டில் ஏதோ குளறுபடி செய்து விடுகிறார் இதனால் இதுதான் சான்ஸ் என ராதிகா கடுப்பில் செல்வியிடம் கத்துகிறார் கேண்டின் கை நழுவி போகும் நிலைமை வந்து விடுகிறது. வேறு வழி இல்லாமல் பாக்யாவும் புலம்பி கொண்டிருக்கிறார் ஆனால் பழனிச்சாமி ஒரு முறை நீங்கள் முதலாளியிடம் பேசிப் பாருங்கள் என பாக்கியாவுக்கு ஆறுதல் கூற உடனே பாக்கியாவும் பேசுகிறார்.
அழுது புலம்பி இனிமேல் இது மாறி நடக்காது என கெஞ்சுகிறார் கடைசியாக இதுதான் லாஸ்ட் வார்னிங் என கம்பெனி முதலாளி கூறுவதால் பாக்கியா சந்தோஷம் அடைகிறார். வெளிய வந்த பாக்கியா செல்வியிடம் இதுதான் நமக்கு வாழ்க்கை இதில் சொதப்பினால் இவங்க இப்படிதான் என மூளையில் உட்கார வைத்து விடுவார்கள் என அனைவரிடமும் அட்வைஸ் செய்து கொண்டிருக்க அப்பொழுது செல்வி தனக்கு நடந்ததை கூறுகிறார் இதனால் வருத்தம் அடைகிறார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் பாக்கியா தன்னுடைய வீட்டில் இருக்கும் அனைவரிடமும் இனிமேல் நான் இங்கிலீஷ் கிளாஸ்க்கு போக மாட்டேன் அங்கு போவதால் குடும்பத்தை சரியாக கவனித்துக் கொள்ள முடியல உங்களை அனைவரையும் சரியாக கவனிக்க முடியவில்லை என பாக்யா கூறுகிறார்.
அதேபோல் அடுத்த காட்சியில் இங்கிலீஷ் கிளாசில் பழனிச்சாமி மற்றும் லோபிக்கா இருவரிடமும் நான் இனி கிளாஸ் இருக்கு வரமாட்டேன் சரியாக கேண்டினை கவனிக்க முடியாமல் போகிறது அதனால் இனிமேல் கேண்டின் வலையை கரெக்டாக செய்ய வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார் பாக்யா அதற்கு பழனிச்சாமி ஒரு சில சின்ன விஷயத்தை விட்டா தான் பெருசா சாதிக்கலாம் அதனால நீங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா நீங்க சாதிப்பீங்க என பழனிச்சாமி ஆறுதல் கூறுகிறார்.
இத்துடன் இந்த ப்ரோமோ விடியோ முடிகிறது.