Baakiyalakshmi August 1 promo : விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளி பரப்பப்பட்டு வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் ஆரம்பத்தில் பரபரப்பாக போனாலும் இடைப்பட்ட காலத்தில் டல்லடிக்க ஆரம்பித்தது அதனால் சுவாரசியத்தை அதிகரிக்க பழனிச்சாமி என்பவரை உள்ளே இறக்கினார்கள்.
ஏற்கனவே கோபி பாக்கியாவை டைவர்ஸ் செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்வார் அதன் பிறகு பாக்கியா வீட்டுக் கடன் கேண்டீன் என மிகவும் பிசியாக தன்னை வைத்துக் கொள்கிறார் மேலும் கோபியிடம் வீட்டை ஒரு மாதத்தில் வாங்குவேன் என சபதம் போட்டு வீட்டையும் வாங்குகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் இனியா ஸ்கூலில் ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கிறார் அவரை காலேஜில் சேர்க்கப் போகிறார் அந்த சமயத்தில் பாக்கி அவருக்கு தானும் காலேஜில் படித்தால் என்ன என தோன்றுகிறது இதனால் வீட்டில் உள்ள அனைவரிடம் நான் காலேஜ் போகட்டுமா என கேட்கிறார், வீட்டில் உள்ளவர்களும் பரவாயில்லை நீயும் போய் படி என கூறி விடுகிறார்கள்.
அதனால் எழில் இடம் அட்மிஷன் போட சொல்கிறார் காலேஜில் அட்மிஷன் போட்டதை இனியாவிடம் கூற இனியா அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் என்னோட காலேஜிலேயே அம்மா படிப்பதா என கடுப்பாகிறார் இதை கோபியிடம் இனிய கூற கோபி இன்னும் காண்டாகிறார்.
எப்படியாவது காலேஜ் போவதை தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என கோபி முயற்சி செய்து பாக்யா படிக்கும் இங்கிலீஷ் கோச்சிங் சென்டருக்கு செல்கிறார் அந்த சமயத்தில் அங்கு பாக்யாவிடம் பழனிச்சாமி டே 1 நீங்க ரொம்ப ஸ்வீட் டே டு ஐ லைக் யு டே 3 ஐ லவ் யூ என ப்ரொபோஸ் செய்கிறார் அதை கோபி பார்த்து விடுகிறார் கோபியின் இதயம் வெடித்து விடுகிறது நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு அப்படியே சாய்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.