நிதானமே இல்லாமல் பாக்கியா வீட்டிற்கு வந்த கோபி.! அதிர்ச்சியில் உறைந்த பாக்யா.! அரவணைத்த ஈஸ்வரி பரபரப்பாகும் பாக்யலட்சுமி ப்ரோமோ.

baakiyalakshmi
baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி முன்பு இருந்தது போல் இல்லாமல் சமீப காலமாக தொடர்ந்து குடித்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். ஒருமுறை குடித்துவிட்டு ரோட்டில் கிடந்த கோபியை பாக்யாவே ராதிகா வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்.  அது பெரிய பூகம்பம் போல் வெடித்தது அதுமட்டுமில்லாமல் ராதிகா அதற்கு கோபியை படாதபாடு படுத்தி விட்டார் ராதிகா.

கோபியம் ராதிகா காலில் விழுந்து  கெஞ்சினார் அதன் பிறகு தான் ராதிகா வீட்டிற்கு வந்தார்.  இந்த கோபியிடம் ஈஸ்வரி பேச வேண்டும் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு வர சொல்லுகிறார் அங்கு வந்த கோபியிடம் நீ ராதிகாவை விட்டு வந்துவிடு என கூற கோபியும் தலையை ஆட்டுவது போல் காண்பிக்கிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ராதிகா மீண்டும் காரில் இருந்த கோபியிடம் அனைத்தையும் கேட்டு சண்டை போடுகிறார் அதுமட்டுமில்லாமல் கேண்டினுக்கு சென்று மறுபடியும் கோபியுடன் இணைய நினைக்கிறாயா என பாக்யவை பார்த்து ராதிகா கேட்கிறார் ஆனால் அதற்கு பாக்கியா நான் தூக்கிப்போட்ட வேணாம் என்று கூறிய வாழ்க்கையை தான் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

என அவருக்கு சரியான பதிலடி கொடுத்தார். அப்படி இருக்கும் நிலையில் வீட்டிற்கு வந்து கோபியிடம் பாக்கியாவை தப்பித்துக் கொண்டால் நான் மாட்டிக் கொண்டேன் என புலம்புகிறார் ராதிகா. இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமா வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது அதில் கோபி குடித்துவிட்டு தள்ளாடி கொண்டு காரில் ஏறுகிறார் அப்பொழுது செழியன் அவரை பத்திரமாக காரில் அழைத்துக் கொண்டு வருகிறார் அப்பொழுது ராதிகா வீட்டிற்கு மட்டும் போகாதே என கோபி கூறுகிறார்.

அதனால் செழியன் கோபியை பாக்கியா இருக்கும் வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பொழுது கோபியின் அம்மா ஈஸ்வரி ஷாக்காக எழில் அவரை உடனே ராதிகா வீட்டிற்கு கொண்டு சென்று விடும்படி கூறுகிறார். ஆனால் அதற்கு ஈஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் அவன் இங்கே தான் இருப்பான் அவன் இங்க இல்லை என்பதால் அவன் வீடு இல்லை என்று ஆகி விடுமா என ஈஸ்வரி கூற கோபியை ஈஸ்வரி அழைத்து செல்கிறார் இதை பார்த்து ஒண்ணுமே பேசாமல் பாக்யா நின்று கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே ராதிகா பாக்யாவை வச்சி செய்ய காத்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் கோபி வீட்டிற்கு வந்ததை தெரிந்து கொண்டால் பாக்கியவை ராதிகா கேவலமாக பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.