Baakiyalakshmi : விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்பொழுது பாக்கியா இனியா காலேஜ் அசைன்மெண்டுக்காக ஈஸ்வரி, செல்வியை துணைக்கு கூட்டிக்கொண்டு நான்கு பேரும் சென்று இருக்கின்றனர்.. அங்கு ஒவ்வொரு நாளும் புது புது பிரச்சனைகள் வந்து சேருகின்றன..
கடைசியாக கூட ஈஸ்வரி காட்டில் தொலைந்து போய்விட்டார் அந்த விஷயம் தெரிந்த கோபி ரொம்ப கோபப்பட்டு பாக்யாவை திட்டினார் ஒரு வழியாக பின்பு ஈஸ்வரியை கண்டுபிடித்து விட்டனர்.. இன்றைய எபிசோடில் கூட இனியாவை வழிமறித்து நான்கு இளைஞர்கள் வம்பு இழுத்து வருகின்றனர்.
இனியா பயந்து போய் நிற்கிறார். என்ன நடக்குமோ என்பது தெரியவில்லை எப்படியும் பாக்கியா வந்து இனியாவை கூட்டிட்டு போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்நிலையில் கோபியின் பேச்சை கேட்காமல் இனியாவையும் ஈஸ்வரியையும் பாக்யா கூட்டிட்டு வந்ததால் பாக்யா மேல் செம கோபத்தில் இருக்கிறார்.
கோபி அதனால் எப்பொழுதெல்லாம் அவங்க அம்மா பொண்ணு கிட்ட போன் பேசினாலும் பாக்யாவை திட்டிக் கொண்டே இருக்கிறார்.. அதுபோன்று இன்று ஈஸ்வரியிடம் பாக்யாவை திட்டுவதற்கு பதிலுக்கு தன் மகனிடம் பாக்யாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..
உன்னால தான் பிரச்சனை நீ எதும் அவளை பத்தி இனிமே பேசாத என மருமகளுக்கு சப்போர்ட் பண்ணி பேசினார்.. இந்நிலையில் பாக்கியலட்சுமி ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது அதில் கோபியிடம் ஈஸ்வரி காட்டில் இருக்கிறேன் என போனில் சொல்வதற்கு ஏமா திரும்ப காட்டுக்கு போனீங்க அங்க மிருகம் எல்லாம் வரும் என்று கோபி சொல்ல..
அதான் பாக்கியா இருக்கால அவளை நம்பி எங்க வேணாலும் நான் போவேன் நீ போனவை என கோபியுடன் சொல்கிறார்.. மேலும் பாக்கியா விடமும் ஆம்பளைங்க இல்லாம நம்ம தனியா எங்கேயும் போனதில்ல இல்ல இது நல்லா தான் இருக்கு.. நாமளும் இப்படி அடிக்கடி எங்கேயாவது போகலாம் என சொல்ல பாக்கியா இது என் அத்தையா என ஆச்சரியப்படுகிறார்…