18 லட்சத்தை கோபி மூஞ்சில் வீசி, கபாலி ஸ்டைலில் கேட்டை இழுத்து மூட சொன்ன பாக்யா.! பொட்டி படுக்கையுடன் நடுத்தெருவுக்கு சென்ற ராதிகா.! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ வீடியோ.

Baakiyalakshmi 10th to 15th July 2023 - Promo
Baakiyalakshmi 10th to 15th July 2023 - Promo

baakiyalakshmi 10th to 15th july 2023 promo : பாக்கியலட்சுமி சமீபத்திய  எபிசோடில் பாக்யாவிடம் வந்து கோபி 18 லட்சத்தை இன்னும் ரெண்டு நாளில் உன்னால் எப்படி கொடுக்க முடியும், என சொடக்கு போட்டு பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் சொடக்கு போட்டு பேசினா போதாது அதை எப்படி கொடுக்கணும்னு தெரியணும், 18 லட்சத்துக்கு எத்தனை சைபர்னு தெரியுமா என பாக்கியவை ரொம்ப அசிங்கமாக பேசுகிறார் கோபி.

அதுமட்டுமில்லாமல் ராதிகாவும் ஆபீஸ் கேண்டினில் வைத்து 18 லட்சத்தை எப்படி கொடுக்க போற பாக்கியா, நீ எனக்கு காபி போட்டு கொடுத்து காபி டம்ளரை கழுவ தான் லாக்கி என்பது போல் அவரும் அசிங்கப்படுத்துகிறார். இதனால் பாக்கியா தன்னுடைய வைராக்கியத்தில் இருந்து பின் வராமல் போட்ட சவாலில் ஜெயிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.

கல்யாண பங்க்ஷனில் சமைத்ததற்கு எவ்வளவு காசு வந்துள்ளது என பாக்கியவும் ஜெனியும் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது 8 லட்சம் இருப்பதை ஜெனியிடம் கூற மீதி 10 லட்சத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது எழில் நான் ஒரு சின்ன வேலையா வெளிய போயிட்டு வரேன் என கிளம்புகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் கோபி பாக்கியாவிடம் சொடக்கு போட்டு சொன்னில 18 லட்சத்தை எப்படி கொடுக்க போற என கேட்க பாக்யா உள்ளே போகிறார் அப்பொழுது கோபி அப்படி இல்ல வழி இப்படி என வெளியே துரத்தி விட பார்க்க, ஆனாலும் பாக்கிய உள்ளே போய் 18 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து கோபி முகத்தில் வீசுகிறார்.

இதனால் ராதிகா மற்றும் கோபி இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் பிறகு சிறிது நேரத்தில் பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே செல்கிறார்கள், அப்பொழுது பாக்யா கேட்ட இழுத்து மூடுடா என கேத்த்டாக கபாலி ஸ்டைலில் கூறுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.