கடந்த சில வருடங்களாகவே ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி-யில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புதிய புதிய சீரியல்கள் புதிய புதிய ரியலிட்டி ஷோ என ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதிலும் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் நடித்து வரும் கோபி என்ற கதாபாத்திரமும் பாக்கியலட்சுமி ராதிகா என்ற கதாபாத்திரமும் மிகவும் பிரபலம். மேலும் இந்த சீரியலில் கோபி பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் அதனால் கோபியை பெரும்பாலும் ரசிகர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
மேலும் கோபி முதன் முதலில் பாக்யாவை தான் திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு செழியன் எழில் இனியா என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை அனைவரையும் விட்டுவிட்டு தான் கோபி இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஒவ்வொரு நாளும் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்ட வரும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் தற்பொழுது இன்னும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் எழிலின் அப்பா கோபி வீட்டை விற்க வேண்டும் என கூறுகிறார் அதனால் எழில் எப்படியாவது வீட்டை வாங்க வேண்டும் என தான் காதலித்து வந்த அமிர்தாவை விட்டுவிட்டு வர்ஷினியை பணத்திற்காக திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார் எழிலை சம்மதிக்க வைப்பது எழில் பாட்டி ஈஸ்வரி மற்றும் எழிலின் அண்ணன் செழியன். ஆனால் எழில் பணத்திற்காக தான் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது பாக்கியா அவருக்கு தெரியாது.
அதேபோல் எழில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதும் அமிர்தாவுக்கு தெரியாது திடீரென மணமேடைக்கு அமிர்தா வருகிறார் அங்கு எழிலை பார்த்து அமிர்தா அதிர்ச்சி அடைகிறார் எழில் அமிர்தா விடம் மன்னிப்பு கேட்கிறார் பின்பு தனது நண்பனை அமிர்தாவை கொண்ட வீட்டில் விடும்படி கூறுகிறார் எழில். இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி ஒரு முடிவுக்கு வருகிறார் எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என முடிவு செய்கிறார்.
உடனே அடுத்த நாள் திருமணத்திற்கு அனைவரும் ரெடியாகி கொண்டிருக்கிறார்கள் ஆனா பாக்யாவை காணும் பாக்கியா வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு அமிர்தாவை திருமணம் மேடைக்கு அழைத்து வருகிறார் அப்பொழுது திருமணம் நடக்க இருக்கும் பொழுது பாக்கியலட்சுமி திருமணத்தை நிறுத்துங்கள் என கூறி திருமணத்தை நிறுத்துகிறார் அப்பொழுது பாக்யலட்சுமி திடீரென மணப்பெண்ணாக அமிர்தாவை அழைத்து வருகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
இனி அடுத்த எபிசோடில் அமிர்தாவுக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும்.