தோள் கொடுப்பான் தோழன்.. முதன்முறையாக பாக்கியாவிற்கு சப்போர்ட் பண்ணி கோபியவே எதிர்க்கும் ராதிகா…

baakiyalakshmi serial
baakiyalakshmi serial

Baakiyalakhmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கோபி செய்த அதே தவறை செழியனும் செய்திருப்பதால் ஒட்டுமொத்த குடும்பமே சுக்குநூறாக உடைந்து உள்ளது.

அனைவரும் பாக்கியா மேல் பழி போட ராதிகா பாக்கியா மேல் எந்த தவறும் இல்லை என ஆதரவாக இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோபிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனது அம்மா ஈஸ்வரியின் வேண்டுகோளின் படி அவர்களுடன் இருந்து வருகிறார். இந்த நேரத்தில் மாலினி செழியன் இருவரும் பழகி வந்த விஷயம் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராக மணிவண்ணன் இருந்தபோது.. அரிய புகைப்படம் இதோ

செழியனுக்கு பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும் மாலினி உடன் நெருக்கமாக பழகி வந்தார் பிறகு ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன் மாலினியை சரியாக கண்டு கொள்ளாத காரணத்தினால் செழியன் மீது மிகவும் கோபப்பட்டார். எனவே இது குறித்த உண்மைகள் பாக்கியாவிற்கு தெரிய வந்து பலமுறை செழியனை கண்டித்தார்.

ஒரு கட்டத்தில் மாலினிக்கு போன் பண்ணி பேச கோபத்துடன் வீட்டிற்கு வந்து செழியன் உடன் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோவை ஒட்டுமொத்த குடும்பத்தினர்கள் முன்பும் போட்டு உடைத்தார். எனவே இதனால் சுக்கு நூறாக உடைந்த ஜெனி என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி இருக்க வேண்டும் என பாக்கியாவிடம் கோபப்பட்டார்.

இந்த சூழலில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி பாக்கியா நம்ம கிட்ட இத சொல்லாததால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை. இந்த வீட்டோட நிம்மதியை நீ கெடுத்துட்ட என கத்திக் கொண்டிருக்க இந்த நேரத்தில் ராதிகா கைத்தட்டிக் கொண்டே என்ட்ரி கொடுக்கிறார்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராக மணிவண்ணன் இருந்தபோது.. அரிய புகைப்படம் இதோ

பாக்கியா உங்க கிட்ட சொல்லாதது தான் பிரச்சனையா? இவங்தா தப்பு பண்ணுனாங்கலா தப்பு பண்ணினது செழியன் அவன் பாட்டுக்கு உக்காந்துகிட்டு இருக்கான் இந்த வீட்ட பத்தியும் ஜெனிய பத்தியும் அவன் யோசிக்கவே இல்ல. பிரச்சனையாகும் என்று தெரிஞ்சு தான் அவன் இத பண்ணுனா முதல்ல அவனை கேளுங்க அதை விட்டுட்டு இவங்கள கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க எனக் கூற ஈஸ்வரி, கோபி என அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். பிறகு கிச்சனில் தலைவலியுடன் பாக்கியா யோசித்துக் கொண்டிருக்கிற ராதிகா டீ போட்டு பாசத்துடன் கொடுக்கிறார்.