காசு கொடுக்க பயந்து நெஞ்சு வலிக்குதுன்னு நாடகம் போட்ட கோபி.. துடியாய் துடிக்கும் ஈஸ்வரி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakashmi today episode October 19 : இன்றைய எபிசோடில் ராதிகா அவங்க அம்மாவுக்கு பிறந்தநாள் வருவதால் கிப்ட் வாங்க நகை கடைக்கு மையூ, கோபி, ராதிகா மூன்று பேரும் சென்று இருக்கின்றனர் அங்கு ராதிகா ஆரம் காமிங்கள் என்று சொல்ல கோபி வயசானவங்களுக்கு எதுக்கு ஆரம் சின்னதா மெலிசா செயின் வாங்கலாமே என்று சொல்கிறார்.

ஆனால் ராதிகா வீட்டோட மருமகன் நீங்க காஸ்லியான கிப்டா வாங்கி தரது இல்லையா என்று ஆரம் பார்க்கின்றனர்.. அந்த ஆரத்தின் விலையை கோபி கேட்க நகை கடையில் வேலை செய்பவர் மூன்று லட்சம் என்று சொல்கின்றனர் பிறகு மையூவும் ஒரு ஆரம் செலக்ட் பண்ணி வைக்கிறார்.. பிறகு அந்த ரெண்டு ஆரத்தில் கோபி ஒன்னை சூஸ் பண்ணுகிறார்.

சிங்கம் மாதிரி எதிர்பார்த்தோம்.. ஆனா பூனையா மாறிடுச்சு – லியோ படத்தை விளாசிய சினிமா விமர்சகர்.!

அதன் விலை மூன்று லட்சத்து 30 ஆயிரம் வருகிறது இதைக் கேட்டு கோபி ஷாக் ஆகிறார் அவ்வளவு பணம் நம்மகிட்ட இல்லையே என்ன பண்றது என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது கோபி எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு நெஞ்சு வலிக்குது என மயங்கி விட்டார் உடனே ராதிகா கோபியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து கொண்டு போய் சேர்த்து விட்டார்.

டாக்டர் கோபிக்கு நெஞ்சுவலி எல்லாம் இல்லை ஸ்ட்ரெஸ் ஆள வந்த மயக்கம் தான் மத்தபடி எந்த பிரச்சனையும் இல்ல அவர் தூங்கி எழுந்தாலே சரியாயிடுவார் என சொல்கிறார்.. அடுத்து ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் நேற்று கோபிக்கு ஏதோ ஆன மாதிரி எனக்கு கனவு வந்தது அவன் எப்படி இருக்கான்னு தெரியல போன் பண்ணி பார்க்கிறேன் என கோபிக்கு போன் பண்ணுகிறார்.

லோகேஷின் தலை தப்பியதா… இதோ லியோ ட்விட்டர் விமர்சனம்.!

கோபி போனை எடுத்து இப்பதான் உங்கள பத்தி நெனச்சிட்டு இருந்தேன், கடைக்கு போன இடத்துல திடீர்னு நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்துட்ட ராதிகா ஹாஸ்பிடல சேர்த்து இருக்கா இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் உடனே ஈஸ்வரி என் பையனுக்கு ஹார்ட் அட்டாக் தான் வந்துச்சு என வீட்டில் புலம்பி அழுது கொண்டிருக்கிறார்.

பிறகு செழியன் கோபிக்கு போன் பண்ணுகிறார் அப்பொழுது ராதிகா செழியனிடம் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல நாங்க ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போயிட்டு இருக்கோம், டாக்டர் செக் பண்ணிட்டு ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்க என்று சொல்கிறார் செழியனும் இதை ஈஸ்வரியிடம் சொல்ல ஈஸ்வரி நான் கோபியை உடனே பார்த்தே ஆகணும் என்று ராதிகா வீட்டிற்கு கிளம்புகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது