விஸ்வரூபம் எடுத்த பாக்கியா… இப்பவே தலையில் துண்டை போட்ட கோபி… வைரலாகும் புகைப்படம் பரபரப்பில் பாக்கியலட்சுமி சீரியல்…

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பிஎல் முதலிடம் பிடிக்க வேண்டும் என புதுப்புது சீரியல்களை பரபரப்புடன் ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி யில் நல்ல இடத்தை பிடித்து வருகிறது. அதிலும் சமீப காலமாக விஜய் தொலைக்காட்சி சீரியலில் நம்பர் ஒன் இடத்தை அவ்வபோது பெற்று வருகிறது.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் இந்த நிலையில் இந்த சீரியலில் இனியா சரண் என்பவரை காதலிக்கிறார் இது வீட்டில் இருக்கும் யாருக்கும் இன்னும் தெரிய வரவில்லை. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் சரண் இனியாவும் டியூஷன் முடித்துவிட்டு பேசிக்கொண்டே வருகிறார்கள். அப்பொழுது சரண் இனியாவிடம் விளையாட்டாக ப்ரொபோஸ் செய்கிறார்.

உடனே இனியா காதலில் உருகி இருக்கிறார். மற்றொரு பக்கம் அமிர்தா செழியன் அவர்களுக்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு கொடுக்கிறார் அதனால் செழியன் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது அது மட்டும் இல்லாமல் நிலா பாப்பாவும் செழியன் இடம்  விளையாடி வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாக்கியா கேட்டரிங் ஆர்டர் எடுத்துவிட்டு இங்கிலீஷ் தெரியாமல் தடுமாறினார். அதனால் இனி பாக்யா இங்கிலீஷ் கற்றுக்கொள்ள  கிளாஸ் போக இருக்கிறார்.

பாக்யாவின் படிப்படியான முன்னேற்றம் கோபிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பாக்கியா வெளியிட்ட சவாலில் எப்படியாவது இருபது லட்சத்தை பாக்கியா கொடுத்து விடுவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் பாக்கியா படிப்படியாக அடுத்தடுத்து  முன்னேறி வருகிறார். பாக்கியா   ஒரு மண்ணு முட்டு அவருக்கு எப்படி இவ்ளோ பெரிய காண்டாக்ட் கிடைத்தது என ராதிகா அதிர்ச்சடைகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த காண்ட்ராக்ட் கிடைக்கக்கூடாது என ராதிகா பல சூழ்ச்சி வேலைகளை செய்தாலும் பாக்கியாவிற்கே இந்த காண்டரக்ட் கிடைத்துள்ளது அதனால் இனி வரும் எபிசோடுகளில் பாக்கியா அவருக்கு ராதிகாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராதிகா காண்ட்ராக்ட் கிடைத்தது கோபியிடம் கூறிக் கொண்டிருக்கும் பொழுது அவளுக்கே ஒன்னும் தெரியாது அவளுக்குள் இவ்வளவு பெரிய திறமை இருக்கிறதா என பாக்கியாவை புகழ்ந்து கொண்டிருக்கிறார் கோபி.

இதைப் பார்த்து காண்டாகி ராதிகா கோபியை விலாசி தள்ளுகிறார். இந்த நிலையில்  திடீரென கோபி சமூக வலைதளத்தில் தலையில் துண்டை போட்டு இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள்  சீரியல் முடிவில் இதுதான் உங்களுக்கு ஏற்படும் நிலைமை என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

baakiyalakshmi
baakiyalakshmi