வீட்டையும் எழுதி வாங்கிக்கொண்டு புலம்பவிட்ட பாக்கியா.! வெளியே நின்று வீட்டை பார்த்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி ..ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் வாரம் தோறும் டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களை பிடித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபி ராதிகாவிற்கு டுவிஸ்ட் வைக்கும் வகையில் பாக்யா போட்ட சவாலில் ஜெய்த்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ராதிகா கோபியை அழைத்துக்கொண்டு பாக்யாவின் வீட்டில் குடியேறுகிறார். தொடர்ந்து இவர்களுக்கிடையே மிகப்பெரிய சண்டைகள் ஏற்பட ஒரு கட்டத்தில் ஈஸ்வரியை வா போ என மரியாதை இல்லாமல் ராதிகா திட்டி விடுகிறார். எனவே பாக்கியா இதனைப் பற்றி கோபியிடம் கூற ராதிகாவை திட்டுவதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை என சொல்கிறார்.

எனவே இதனால் உங்களுக்கு தர வேண்டிய மீதி 18 லட்சம் ரூபாய் பணத்தை தந்துவிட்டால் வீட்டை காலி செய்து விட வேண்டும் என சொல்ல அதற்கு கோபியும் சரி என ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு பாக்கியா சபதம் போட்டது போலவே ஒரு மாதத்தில் 18 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து கோபியின் கையில் ஒப்படைக்கிறார். இதனால் இந்த வீட்டை விட்டு வெளியேற கோபி தயங்க ஆனால் ராதிகா இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என தங்களுடைய பொட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கிளம்புகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு செல்கிறார்கள். அங்கு வீட்டை பாக்யாவிற்கு எழுதிக் கொடுக்க கோபி தயங்க ராமமூர்த்தி அதுதான் பணம் வாங்கிட்டில கையெழுத்தை போடு என சொல்ல பிறகு கோபியும் கையெழுத்து போடுகிறார். வெளியில் வந்தவுடன் இதற்கு மேல் அந்த வீட்டிற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் உரிமையும் கிடையாது என கூறுகின்றார்.

பிறர் அனைவரும் வீட்டிற்கு வந்தவுடன் ஏழில் பாக்யா பெயர் போட்ட பலகையை வீட்டிற்கு முன்பு வைக்க இதனை எதார்த்தமாக நடந்து வரும் பொழுது பார்க்கும் கோபி, ராதிகா இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.