கோபியை வச்சி செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.! என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கும் கோபி.!

gobi 2
gobi 2

விஜய் தொலைக்காட்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய இரண்டு சீரியல்களும் டிஆர்பி யில் முன்னணி சீரியலாக இருக்கின்ற சீரியல்கள்தான் இந்த இரண்டு சீரியல்களும் இந்த சீரியல்கள் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்தது.

இதைத்தொடர்ந்து இந்த வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் இணைந்து மெகா சங்கமாக நடத்திவருகின்றனர். இதில் தற்போது தாத்தாவின் பிறந்த நாளுக்காக பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினை பாக்கியா வரவழைத்திருக்கிறார். இவர்கள் வந்ததை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அனைவரும்

ஆனால் கோபிக்கு இதில் துளியும் விருப்பமில்லாமல் எரிச்சல் அடைகிறார்.இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் “இனிமே தான் இருக்கு கோபி உனக்கு” என்று சந்தோஷப் படுகிறார்கள். கோபியால் ராதிகாவிடம் தனியாக பேச முடியவில்லை மொட்டை மாடிக்கு சென்றாள் மாடியில் ஜீவா கதிர் எழில் இருக்கிறார்கள். இதனால் ராதிகாவிடம் பேச முடியவில்லை. இதனை நினைத்து கோபி கடும் கோபத்தில் உள்ளார்.

இந்நிலையில் இரவு நேரத்தில் கோபி அதிக நேரம் போன் பேசுவது பற்றி கண்ணன் ஐஸ்வர்யாவிடம் கூறினார். இதனை கேட்டதிலிருந்து ஐஸ்வர்யா கோபியை கண்காணித்து கோபி பேசிய நம்பரை பார்த்துவிட்டு அது ராதிகா நம்பர் தான் தான் என்று தெரியவருகிறது. ஐஸ்வர்யாவுக்கு இதைப்பற்றி பாக்கியா விடும் சொல்வதாக இருக்கிறார்.

எனவே, தாத்தாவின் பிறந்த நாளுக்காக இன்னும் சிலரை அழைப்பதற்காக செல்கிறார்.பாக்கியா கூட தனமும் செல்கிறார். அங்கு ராதிகாவை அழைக்கிறார்கள் ராதிகாவும் கோபியிடம் கூறினாள் அவர் போக வேண்டாம் என்றுதான் சொல்வார் என்று கோபியிடம் இதைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்க போகிறார்.

மேலும் தாத்தாவின் பிறந்த நாள் அன்று ஒரு பெரிய உண்மை வெளியே வர இருப்பதை அந்த காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினால் ஒரு பெரிய ஆப்பு காத்திருக்கிறது தந்திர மன்னன் கோபிக்கு என்னதான் நடக்கும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.