கோபியை போல் நிஜ வாழ்க்கையிலும் இரண்டு பெண்களை திருமணம் செய்துக் கொண்டு மீண்டும் முதல் மனைவியை இணைந்த பிரபலம்.!

baakiyalakshmi-353
baakiyalakshmi-353

ஆண்கள் பெண்கள் என விரும்பி பார்த்து வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் வயதான பிறகும் மூன்று தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்து வரும் கோபி தனது கல்லூரி காதலியை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் எனவே தனது முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்து பிரிகிறார்.

இவ்வாறு இரண்டு திருமணம் செய்து கொண்டு கோபி படாத பாடு பட்டு வரும் நிலையில் தொடர்ந்து சுவாரசியமான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. எனவே டிஆர்பியில் பயங்கர டஃப் கொடுத்த நிலையில் மேலும் பாக்கியலட்சுமி சீரியலை மேம்படுத்த புதிதாக நடிகர் ரஞ்சித்தை பழனிசாமி என்ற கதாபாத்தில் அறிமுகம் படுத்தினர்.

அந்த வகையில் பழனிசாமியின் கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கிய நிலையில் இவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படி நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியா ராமன் இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இருவரும் சில திரைப்படங்களில் சேர்ந்து நடித்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டு பிரிந்தனர். எனவே அதே வருடம் ரஞ்சித் நடிகை ராகசுதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். எனவே இவர்கள் ஏற்கனவே பழகி வந்த காரணத்தினால் தான் பிரியா ராமன் பிரிந்தார் என கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் ரஞ்சித்திற்கு இரண்டாவது திருமணம் செய்த ராகசுதாவை பிடிக்காத காரணத்தினால் 2015இல் விவாகரத்து செய்தார்.

ஒரு வருடம் மட்டுமே அவருடன் இணைந்து வாழ்ந்தார் இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் 3 வருடங்கள் கழித்து 2018ல் முதல் மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ரஞ்சித். இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீப காலங்களாக தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.