விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் சாதாரணமாக ஒரு குடும்பப்பெண் எவ்வளவு பிரச்சினைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது ரசிகர்கள் எந்த நடிகர் நடிகையாவது திட்ட வேண்டுமென்றால் லைவ் சேட்டில் இல்லை என்றால் அவர்களின் இன்ஸ்டாகிராமில் திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருபவர் தான் சதீஷ் இவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் இவர் தனது மனைவிக்கு தெரியாமல் தனது முன்னால் காதலியுடன் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் அசிங்க அசிங்கமாக இவரை திட்டி வருகிறார்கள். இவரும் பணம் கொடுக்கிறார்கள் அவங்க சொல்ற மாதிரி நடிக்கிற ஏன் என்னை இப்படி திட்டுறீங்க என்று தினம்தோறும் அவர் கதறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது ஒருபுறமிருக்க தற்பொழுது இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக குடும்பப் பெண்ணாக பாக்கியலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா. இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் செம குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுதான் குடும்ப குத்து விளக்காக என்று கூறி வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.