தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் எந்த சீரியலாக இருந்தாலும் அதில் இல்லத்தரசிகள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்தது போல குடும்ப கதையையும் இளசுகளின் மனதை கவர்வதற்காக அதிகபடியான காதல் காட்சிகளும் போன்றவற்றை மையமாக வைத்து ஒளிபரப்பி வருவதால் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் கொரோனாவின் முதல் அலையின் பொழுது சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சீரியல்களும் முன்பு ஒலிபரப்பான பழைய எபிசோடுகளை மீண்டும் ஒளிபரப்பி வந்தார்கள்.
அதன் பிறகு மீண்டும் சீரியல்கள் புதிதாக ஒளிபரப்பாகும் பொழுது சில சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது மற்றும் அதே பெயரில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் கதை மாற்றத்துடன் அறிமுகமானது.இன்னும் சில சீரியல்கள் புதிதாக அறிமுகமாகி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல் .
இந்த சீரியல் ஒரு குடும்பத்தலைவி எவ்வளவு கஷ்டங்களையும், அவமானங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக ஒவ்வொரு காட்சியும் அமைகிறது. அந்தவகையில் கதாநாயகியின் கணவர் தனது பழைய காதலியுடன் எப்படி எல்லாம் பொய் சொல்லி தனது மனைவியைக் குறை சொல்கிறார் என்ற எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த கதாபாத்திரத்தில் கோபி என்ற கேரக்டரில் சதிஷ் என்ற புதுமுக நடிகர் நடித்து வருகிறார். எனவே ரசிகர்கள் உண்மையாலுமே சதிஷை இன்ஸ்டாகிராமின் மூலமாக திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் சதீஷ் பணம் கொடுக்குறாங்க நான் நடிக்கிறேன் அதற்காக ஏன் திட்டிரிங்க என இவர் கதறி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தார்.;
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் சதீஷ் தற்போது எம்ஜிஆர் போல் வேடம் அணிந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.