பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் போலீஸ் உங்களுடைய மனைவி யார் எனக் கோபியிடம் கேட்க அதற்கு ராதிகாவின் அம்மா தாலி கட்டுனீங்களா சொல்லுங்க என கோபியை பார்த்து கேட்க பிறகு போலீசார் ராதிகா இங்க தான் இருக்கணும் சட்டப்படி தாலி கட்டியாச்சு என கூற உடனே ஈஸ்வரி பாக்கியா தான் எங்க மருமகள் அவ தான் இங்க இருக்கணும் ராதிகா இந்த வீட்டு உள்ளே போக கூடாது வீட்டை விட்டு வெளியே போகட்டும் கோபி வேணும் என்றால் இருக்கட்டும் என கூறுகிறார் இதனால் போலீஸ் அதிர்ச்சி அடைகிறார்கள்.
மேலும் போலீசார் பாக்யாவிடம் உங்கள தான் சட்டப்படி டிவோர்ஸ் பண்ணியாச்சுல்ல அப்புறம் ஏன் நீங்க இன்னும் இருக்கீங்க என கேட்க உடனே எழில் எங்க அம்மாவ வெளியில போக சொல்ல நீங்க எல்லாம் யாரு எங்க அம்மா இங்கே தான் இருப்பாங்க எனக் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் செழியன் அந்த ஆள் தான் வேற கல்யாணம் பண்ணிட்டார் இல்ல அவர் வெளியில் போக சொல்லுங்க எங்க அம்மாவ நீங்க போக சொல்ல முடியாது எனக்கு கூறுகிறார் குடும்பமே பாக்கியா பக்கம் நிற்கிறது ஆனால் ராதிகா செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒன்னும் தெரியாதது போல் நிற்கிறார்.
பிறகு போலீசார் சட்டப்படி இவங்க கழுத்துல தாலி கட்டிட்டாரு அதனால இவங்க இங்கே இருந்து அனுப்புவதற்கு உங்க யாருக்குமே உரிமை கிடையாது, எனக் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் இந்த வீடு யாருடைய பெயரில் இருக்கிறது என கேட்க கோபி என்னுடைய பெயரில் தான் இருக்கிறது என கூறுகிறார் உடனே ராமமூர்த்தி அவன் சொந்தமாக உழைத்து சம்பாதித்தது கிடையாது இதுல பெரிய பங்கு எங்க பங்கு இருக்கிறது என கூறுகிறார்.
இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது மூத்த மருமகளே தான் இவங்க பாக்குறாங்க என் புள்ளையை கழுத்தை புடிச்சு வெளிய தள்றாங்க என ராதிகாவின் அம்மா கூறுகிறார். நீங்க உள்ள போங்க உங்களை யாரும் வெளியில போக சொல்ல உரிமை கிடையாது அப்படி ஏதாவது சொன்னா எனக்கு உடனே கால் பண்ணுங்க நான் வரேன் எல்லாத்தையும் தூக்கி உள்ள வச்சுருவேன் என மிரட்டி விட்டு போலீசார் செல்கிறார்.
போலீஸா சென்றவுடன் வீட்டில் அனைவரும் நின்று கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ஈஸ்வரி கதறி கதறி அழுகிறார் உன்னைப் பெற்றதற்கு என்ன எந்த நிலைமையில் நிறுத்திவிட்ட இந்த வயசுல உனக்கு அட்வைஸ் பண்ணி கொண்டு இருக்கிறோம் நீ எல்லாம் ஒரு புள்ளையா உன் புள்ளையே உன்ன எங்கியாவது மதிக்குதா என ராமமூர்த்தி கோபியை பார்த்து திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரி இனியாவையும் உன்னையும் பிரிக்க பார்க்கிற ராதிகா.
அதனாலதான் நான் அப்படி பேசினேன் இது உனக்கு புரியலையா ஏற்கனவே குடும்பத்தில் இருந்து உன்னை பிரிச்சிட்டா பசங்க கிட்ட இருந்து அவ பிரிச்சிட்டா இப்ப இனியா கிட்ட இருந்து பிரிக்க போற அதான் அப்படி பேசினா என்னையே வீட்டை விட்டு வெளியே போக சொல்ற ? என கோபியிடம் நடந்து அனைத்தையும் கூறுகிறார். அதேபோல் ராமமூர்த்தியும் நீ எப்ப ராதிகாவ தலைமுழுகுறியோ அப்பதான் நீ நிம்மதியா இருக்க முடியும் இல்லன்னா மத்தளம் மாதிரி ரெண்டு பக்கமும் முத்துப்பட்டுக்கிட்டு தான் இருக்கணும்.
வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கிட்டது உன் தப்பு உனக்காக இந்த வயசுல நாங்க அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கோமே தயவு செஞ்சு நீயாவது நிம்மதியா இருக்கணும்னா ராதிகாவை விட்டு தல முழுகு என ராமமூர்த்தி கூறி விடுகிறார். இதனால் கோபி கோபத்துடன் மேலே செல்கிறார்.
ராதிகாவை கூப்பிட்டு கதவை தட்டுகிறார் ராதிகா கதவை திறக்கிறார் உடனே ராதிகா கோபியிடம் உங்க அம்மா என்ன சொன்னாங்க எனக் கேட்க உடனே கோபி எங்க அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல நீங்க யாரு என கேட்க உங்க அம்மா இதுதான் சொன்னாங்களா ஏன் இதுக்கு முன்னாடி அவங்க காபியை தட்டி விட்டது என்ன ஒரு வீணா போன பொருளை தூக்கி போடுவது போல் கோபி போடுவேன் என்று சொன்னதெல்லாம் சொல்லலையா என கேட்க ஓஓ இவ்வளவு சொல்லி இருக்காங்களா என கோபி மறுபடியும் ராதிகா பக்கமே சாய்வது போல் பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.