திரை உலகில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒரு கட்டத்தில் காதல் வாழியப்பட்டு பின் திருமணம் செய்து கொள்கின்றனர் அந்த வகையில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகாவை தொடர்ந்து பல ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர். அதே சமயம் சினிமாவையும் விடாமல் அதையும் ஒரு பக்கம் நல்லபடியாக பார்த்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி. இந்த படம் இந்திய அளவில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது இதன் இரண்டாவது பாகமும் வெற்றி அடைந்தது இந்த படத்தில் பிரபாஸ் உடன் கைகோர்த்து ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பல முன்னணி நடித்து இருந்தனர்.
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்த இருந்தார் ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர் விரைவில் திருமணம் எல்லாம் செய்ய இருந்தனர் என பேசப்பட்டது ஆனால் அது நடைபெறவில்லை.. அதன் பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி இருந்தனர்.
சமீபத்தில் பிரபாஸின் பெரியப்பா நடிகர் கிருஷ்ணமா ராஜு திடீரென மரணம் அடைந்தார் அவர் அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் ஆசைப்பட்டார் ஆனால் அது நடக்கவில்லை. பிரபாஸின் பெரியப்பா உடல்நல குறைவால் மருத்துவமனையில் இருந்த பொழுது அனுஷ்கா சென்று அவரை சந்தித்ததாக ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
அவரது ஆசையை நிறைவேற்ற பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு தெரியவில்லை இரு தரப்பினரும் தற்பொழுது எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர்..