தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக பார்க்கப்படுபவர் விஜய் சேதுபதி இவர் தனது சினிமா பயணத்தில் ஹீரோ, வில்லன், குணச்சத்திரம், கெஸ்ட் ரோல் என அனைத்திலும் நடித்து வருகிறார் இதனால் அவருக்கான பட வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது..
தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் வில்லனாக நடித்து வருகிறார் இப்பொழுது கூட அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் அது மட்டுமல்லாமல் கத்ரீனா கைஃப் உடனும் கைகோர்த்து இவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போதாத குறைக்கு ஹீரோவாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்திலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதி கடைசியாக நடித்த டிஎஸ்பி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் கூட டிஎஸ்பி படக்குழுவினர் படம் வெற்றி பெற்றதாக அறிவித்து கேக்கு வெட்டி கொண்டாடினார். இந்த நேரத்தில் டிஎஸ்பி திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார் பிரபாகரன் இவர் தெலுங்கில் ஏற்கனவே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆம் இவர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் காலகேய மன்னனாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சமயத்தில் பிரபாகரன் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவர் சில பதிவுகளை போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. நான் பாகுபலி காலகேய பிரபாகரன் வணக்கம் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான டிஎஸ்பி திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளேன்..
விஜய் சேதுபதி சார் போன்று ஒரு ஆகச் சிறந்த கலைஞனோடு நடித்தது மிக்க மகிழ்ச்சி ஐ லவ் யூ விஜய் சேதுபதி சார் என கூறி இருக்கிறார் . இதோ அந்த புகைப்படத்தையும் நீங்களே பாருங்கள்..