அட பாகுபலி படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.?

baahubali

தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி செலவில் இயக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் பாகுபலி. இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டில் தமிழ்,  தெலுங்கு,  மலையாளம், கன்னடம்,  ஹிந்தி போன்ற 5 மொழியிலும் வெளியிடப்பட்டு மாபெரும் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது இதுவும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இத்திரைப்படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர்,  சுதீப் போன்ற இன்னும் சில பிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாத சிவகாமி தேவி ஒரு நதியில் இறங்கி மகேந்திர பாகுபலியின் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு மகேந்திர பாகுபலி வாழ வேண்டும் என்று கூறி தனது உயிரை அந்த நதியில் தனது உயிரை விட்டு விடுவார்.

sathyaraj
sathyaraj

அந்தக் காட்சியில் மகேந்திர பாகுபலியாக  நடித்த குழந்தை யார் தெரியுமா? அந்தப் பெண் குழந்தையின் பெயர் ஆக்சிதா. கேரள புரோடக்சன் யூனிட்டில் பணிபுரிந்து வந்த வல்சரன் அவர்களின் குழந்தையாகும்.

தற்பொழுது  டைரக்டர் ராஜமௌலி தனது படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்காக இந்த குழந்தையை வல்சரனிடம் கேட்டுள்ளார். அதற்கு வல்சரணும் ஒப்புக்கொண்டு படத்தின் சூட்டிங் ஐந்து நாட்கள் எடுக்கப்பட்டது என்று கூறி தற்போது இருக்கும் அந்த குழந்தையின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.