விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பயங்கர தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்யா ராமமூர்த்திக்கு காபி வேணுமா மாமா என கேட்க எடுத்துக் கொண்டு வா என கூறுகிறார் அப்பொழுது ராமமூர்த்தி காபி குடித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் பாக்கியாவிடம் கோபி எனக்கும் ஒரு காபி கிடைக்குமா என கேட்கிறார் அதற்கு ராமமூர்த்தி ரோட்ல போறவன நெனச்சு ஒரே ஒரு காபி போட்டு கூடுமா எனக் கூறுகிறார்.
பாக்கியா காபி போட்டு கோபியிடம் கொடுக்கப் போகும் நேரத்தில் ராதிகா பார்த்து விடுகிறார். ராதிகாவை பார்த்த கோபி நா காபி கேக்கல என அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார். ஆனால் ராதிகா பாக்யாவிடம் வந்து காபி கொடுத்து கரெக்ட் பண்ண பாக்குறியா என கேட்கிறார் அதற்கு பாக்யா வேணான்னு தூக்கி எறிஞ்சிட்டேன் இவரை இனி கரெக்ட் பண்ணி நான் என்ன பண்ண போறேன் என்பது போல் கூறி விடுகிறார்.
நீங்க இன் செக்யூரிட்டியா ஃபீல் பண்றீங்க அதனால்தான் உங்களுக்கு இது மாதிரி ஒரு டவுட்டு வருது ரோட்ல போறவங்களா நினைச்சு தான் நான் ஒரு காபி கொடுக்கிறேன். என்னோட கேண்டின் ஆர்டர்ல 500 காபி போட்டு கொடுக்கிறேன் அப்பா அந்த 500 பேரையும் நான் என்ன கரெக்ட் பண்ணவா நினைக்கிறேன் அவங்கள கரெக்ட் பண்ணாலும் ஒரு ஆர்டர் கிடைக்கும் என்பது போல் கூறி விடுகிறார்.
அடுத்த காட்சியில் இனியா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார் அப்பொழுது செழியன் ஸ்கூலில் டிராப் செய்ய நேரத்தில் மீட்டிங் வந்து விடுகிறது அதனால் இனியா நான் எப்படி ஸ்கூலுக்கு போவேன் என புலம்பி கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கோபி நான் கொண்டு வந்து விடுகிறேன் என கூறுகிறார் அப்பொழுது பாக்கியாவிடம் இருந்த லஞ்ச் பேக்கையும் கோபி வாங்கிக் கொண்டு கிளம்புகிறார்.
ஈஸ்வரி செல்வி ஜெனி சமையல்கட்டில் இருக்கும் பொழுது ஜெனி எனக்கு ஏதாவது வேலை இருக்கா என கேட்க செல்வி அந்த அரிசியை மட்டும் அலசி கொடு என கூறுகிறார் ஆனால் ஈஸ்வரி அவளை எதுக்கு அலச சொல்ற நீ வேலைக்கு தானே வந்திருக்க நீயே பாரு என்பது போல் கூறிவிடுகிறார். அந்த சமயத்தில் ராதிகா வந்து கோபியை எங்கே போய்ட்டார் கோபியை பார்த்தீர்களா என கேட்க அதற்கு செல்வி ஒரு ஒரு அறையாக திறந்து பார்த்து இங்கு எல்லாம் இல்லையே என ராதிகாவுக்கு லந்து கொடுக்கிறார்.
அதேபோல் ஈஸ்வரியும் இப்பதான் பால் கொடுத்து தொட்டில தூங்க வச்சிருக்கேன் எழுந்ததும் சொல்லி அனுப்புறேன் என இன்னும் ராதிகாவை வெறுப்பேத்துவது போல் பேசுகிறார். பிறகு ராதிகா மறுபடியும் கேட்டுக் கொண்டிருந்ததால் இனியவை ஸ்கூலுக்கு ட்ராப் செய்ய போயிருக்கிறார் என ஈஸ்வரி கூறிவிடுகிறார் இதனால் ராதிகா மயூவை ஸ்கூலில் டிராப் பண்ண சொன்னா பண்ண மாட்டேங்குறாரு ஆனா இனியாவை மட்டும் டிராப் பண்றாரு என மைண்ட் வாய்ஸ் பேசுகிறார்.
அடுத்த காட்சியில் இனியா மற்றும் கோபி இருவரும் காரில் போய்க்கொண்டிருக்கும் பொழுது இனியா அமைதியாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என கேட்க அதற்கு நீங்க மட்டும் மாறலையா நானும் மாறுவேன் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் உங்களை விட்டு பிரிந்த பின்பு தான் அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ஹாப்பியா இருக்காங்க என கூறுகிறார். நீங்க இனிமே குடிக்கிறத நிறுத்தி விடுங்க டாடி என கூற காட் பிராமிஸா நான் இனி குடிக்க மாட்டேன் எனக் கூறுகிறார் கோபி.
அதுமட்டுமில்லாமல் இனிய ராதிகாவையும் விட்டுவிட்டு நம்ம வீட்டிலேயே இருங்க என கூற அதற்கு கோபி அதிர்ச்சி அடைந்து ஏதேதோ காரணம் சொல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.