தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூர்யா தற்போது ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இந்த இரண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.
இரண்டிலும் வெவ்வேறு விதமான கெட்டப்பில் சூர்யா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கையாளுவது மிகவும் பிடிக்கும் அந்த வகையில் தற்போது ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாட காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி வெற்றி கண்ட பா ரஞ்சித் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் தலைப்புக்காக அந்த படத்தின் தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் என்பவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம் படத்தின் முதல் போஸ்டரை பார்த்து விட்டு பா ரஞ்சித் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துக்களை குறிப்பிட்டார் ஜெய்பீம் பட தயாரிப்பாளரான ராஜசேகர பாண்டியன் தலைப்பு வைத்ததற்கு நன்றி சார் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் அவ்வாறு கூற காரணம் ஜெய்பீம் என்ற வார்த்தையை பா ரஞ்சித் அடிக்கடி பயன்படுத்துவது உண்டாம் அந்த வார்த்தையை தற்போது சூர்யா படத்திற்கு வைத்துள்ளதால் அவர் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.