அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் குட்டி குழந்தையாக நடித்த பாப்பாவா இது.! என்ன இப்படி மடமடன்னு வளர்ந்துட்டாங்க

azhakiya-tamil-magan
azhakiya-tamil-magan

2007 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி திரைப்படம் அழகிய தமிழ் மகன் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா சரண்  நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் நமிதா, சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் படத்தில் உள்ள பாடல்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.  அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் விஜய் முதன்முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் இந்த திரைப்படத்தில் ஓட்டப் பந்தய வீரராகவும்,  மற்றொரு விஜய் வில்லனாகவும் மிரட்டி இருந்தார்.

இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் ரசிகர்கள் பெருமளவில் படத்தை எதிர்பார்த்தார்கள். ஆனால் விஜய் வில்லனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை ரசிகர்களால். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதிதா என்ற பாப்பா.

அவர் அந்த திரைப்படத்தில் தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பாலும் கியூட் சிரிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இந்த நிலையில் அவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவருக்கு இருபது வயது ஆன நிலையில் மடமடவென வளர்ந்து பருவ மங்கையாக இருக்கிறார் தற்போது இவர் துபாயில் செட்டிலாகிவிட்டார். அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்குப் பிறகு 2009ஆம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் நிவேதிதா நடிக்கவில்லை.

இந்த நிலையில் அவர் தற்பொழுது எப்படி இருக்கிறார் என்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

nivethitha
nivethitha