கொரோனாவின் இரண்டாவது அலை எப்பொழுது ஆரம்பித்ததோ அதிலிருந்து தொடர்ந்து பல முன்னணி நடிகர், நடிகைகள் போன்ற பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகிறார்கள். எனவே தற்போழுது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க கொரோனாவால் எப்படி உயிர் இறந்து வருகிறார்களோ அதே அளவிற்கு மாரடைப்பு ஏற்படும் பல பிரபலங்கள் இருந்துள்ளார்கள். சமீபத்தில் விவேக் இவரை தொடர்ந்து தற்போது சூர்யா பட நடிகர் ஒருவர் மாரடைப்பால் இறந்து உள்ளார்.
அந்த வகையில் சூர்யாவின் ஆறு திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் காமெடி நடிகர் ஐயப்பன் கோபி. இவர்தான் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர் நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ஜாதிமல்லி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஆறு, காக்கி சட்டை ,சதுரங்க வேட்டை ,கருப்பன், என் ஆளோட செருப்ப காணோம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று உயிரிழந்தார்.