வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக். இவர் பெரும்பாலும் கிராமத்து கதைக்களம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடத்து வருகிறார். சிவக்குமாரின் மகனாக சூர்யா சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனைத் தொடர்ந்து சிவகுமாரின் மகன் என்று அடையாளத்தோடும் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்தோடும் சினிமாவிற்கு கார்த்திக் அறிமுகமானார்.
பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை என தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்தார்.
இவ்வாறு மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் இவருடைய சில திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக வெற்றிப் பாதைக்கு இவர் திரும்புவதற்கும் முக்கிய காரணமாக மெட்ராஸ் திரைப்படம் விளங்குகிறது இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தருவதோடு மட்டுமல்லாமல் தரமான கதை அம்சமுள்ள திர்ல்லர் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிதது வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் விருமன் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
மேலும் தற்பொழுது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கேரக்டர்களின் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் சூரியா, சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோர்களின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் ஆயுத எழுத்து இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது இத்திரைப்படத்தில் கார்த்திக் நடிக்க இருந்த நிலை இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் நடிக்க முதலில் கார்த்தியிடம் கேட்ட பொழுது அவர் எனக்கு நடிக்க விருப்பமில்லை இயக்க தான் விருப்பம் என்று கூறி அந்த திரைப்படத்தில் மணிரத்தினத்திற்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கார்த்திக் மறுத்த கதாபாத்திரத்தில் தான் சித்தார்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.