பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற ஆயிஷாவிற்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா.! வாய் பிளக்கும் சக போட்டியாளர்கள்..

bigg-boss-ayesha
bigg-boss-ayesha

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவைப்பை பெற்ற நிலையில் இந்த வருடம் ஆறாவது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சி அடி எடுத்து வைத்துள்ளது இந்த சீசனையும் இதற்கு முன் தொகுத்து வழங்கிய கமல்தான் இந்த ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதேபோல் இந்த ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அவர்கள் பலரும் புது முகங்களும் இருக்கிறார்கள் அந்த வகையில் இந்த சீசனில் கலந்து கொண்ட ஜிபி முத்து, அசல் கோளாறு, ராபர்ட் மாஸ்டர், ரட்சிதா மகாலட்சுமி, நிவாஷினி, ஆயிஷா, ஜனனி, என பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள் அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர், ஜி பி முத்து, அசல் கோளாறு, என பலரும் வெளியேறி விட்டார்கள் இந்த நிலையில் இந்த வாரம் ஆயிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர் தன்னை ஒரு மாடலாக அடையாளப்படுத்திக் கொண்டார்.

பின்பு சின்னத்திரையில் கால் தடம் பதிக்க ஆரம்பித்தால் அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற தொடரில் நடித்து வந்தார் இந்த தொடர் ரசிகர்களுடன் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்த தொடரில் நடித்து வந்த விஷ்ணுவை ஆயிஷா காதலிப்பதாக பல தகவல் வெளியானது.

இன்நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது பாகத்திலும் இவர் நடித்து வந்தார் இந்த சத்யா இரண்டாவது பாகத்தில் தன்னுடைய லுக்கை மாற்றிக் கொண்டு நடித்திருந்தால் அந்த தொடர் தற்பொழுது முடிவடைந்த நிலையில் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு நன்றாக விளையாடி வந்தார் ஆனால் எதிர்பாராத விதமாக இந்த வாரம் ஆயிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் சம்பளம் அதிகம் வாங்குபவர்கள் லிஸ்டில் ஆயிஷாவும் ஒருவர் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது ஒரு நாளைக்கு 28 ஆயிரம் முதல் 30,000 வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம் இதுவரை 50 நாட்கள் இருந்த ஆயிஷா பல லட்சங்களை தட்டிச் சென்றுள்ளார் என கூறப்படுகிறது இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று இதுவரை தெரியவில்லை.