பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடைய மிகவும் பிரபலம் அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை காண மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ott இணையதளத்தில் காணலாம். இந்த நிலையில் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதில் பல புதுமுக போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் அறிமுகம் அல்லாத நபர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து ஆயிஷா, மகாலட்சுமி, ரச்சிதா ஜனனி, ராபர்ட் என ஒட்டுமொத்தமாக 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த 20 போட்டியாளர்களில் தனித்தனி டீமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் சீரியல் நடிகை ஆயிஷா இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார் அதன் பிறகு இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது அதுமட்டுமில்லாமல் சில பிரச்சனை காரணமாக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவினார் அங்கு சத்யா என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
ஜீ தமிழ்ல் ஒளிபரப்பப்பட்டு வரும் சத்யா சீரியல் ரசிகர்களிடைய மிகவும் பிரபலம். இந்த சீரியலில் நடித்து வந்தார் ஆயிஷா. இவர் ஜீ தமிழில் நடித்து வந்தாலும் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்துள்ளது மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆயிஷா தன்னுடைய துணை இயக்குனர்கள் குறித்து மிகவும் மோசமாக பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது சீரியல் படப்பிடிப்பின் பொழுது ஆயிஷா தூங்கிக் கொண்டிருந்தால் அவரை எழுப்ப வரும் துணை இயக்குனர்களை அடிப்பாராம் காலால் எட்டி உதைப்பாராம் இதனால் பல துணை இயக்குனர்கள் அவரை தூக்கத்தில் இருந்து எழுப்ப பயப்படுவார்கள் என மிகவும் தெனாவட்டாக பேசியுள்ளார். இவர் இவ்வாறு கூறியது ரசிகர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.