நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் டாக்டர் 100 கோடி வசூல் செய்தது அதைத் தொடர்ந்து சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் டான்.
இந்த படமும் இப்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. போட்ட காசையும் தாண்டி அதிகம் வசூலித்து அதிகம் லாபம் பார்த்து வருகிறது. இந்த திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான அயலான் படம் வெகு விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக கைகோர்த்து ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார் இவர்களுடன் இணைந்து இஷா கோபிகர், கருணாகரன், யோகிபாபு, பானுபிரியா, ரியா போன்ற பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் சற்று வித்தியாசமான திரைப்படம் என்பதால் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எந்த மாதிரி நடித்து உள்ளார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் தீவிரமாக முடிந்த்து.
அதை தொடர்ந்து கிராபிக்ஸ் வேலைகள் போய்க் கொண்டிருக்கிறதாம். அதற்கிடையில் சேட்டிலைட் உரிமம் டப்பிங் பிசினஸ் போன்றவை விற்கப்பட்டு வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் டப்பிங் ரைட் விற்கப்பட்டுள்ளது அதன் மூலம் சுமார் 13 கோடி அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.