5 வருட காத்திருப்புக்கு பிறகு வெளியாகிய அயலான் ரசிகர்களை கவர்ந்ததா.!

ayalaan movie review
ayalaan movie review

ayalaan movie trailer : இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரகுல் பிரீ சிங் ஆகிய நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் அயலான் இதற்கு முன்பு ரவிக்குமார் இன்று நேற்று நாளை என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தவர்.

இந்த நிலையில் அயலான் திரைப்படத்தை தொடங்கி 5 ஆண்டுகள் ஆகி அதனை முடிப்பதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டு கடைசியில் ஒரு வழியாக படத்தை கைவிடாமல் முடித்து ரிலீஸ் செய்து உள்ளார்கள் இன்று ஜனவரி 12 2024 ஆம் ஆண்டு ஐந்து வருடத்திற்கு பிறகு வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை இங்கே காணலாம்.

Captain Miller : படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?

வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு அதிசக்தி கொண்ட ஒரு பொருள் கீழே விழுகிறது பணத்தாசை பிடித்த பெரிய தொழில் அதிபரிடம் அந்த பொருள் கிடைத்து விடுகிறது அதை வைத்து உலகில் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி செய்து மிகப் பெரிய தொழிலதிபராக மாற நினைக்கும் வில்லனிடமிருந்து அந்த சக்தி வாய்ந்த பொருளை பூமிக்கு தேடி வரும் ஏலியன் அதை மீட்டதா அந்த ஏலியனுக்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவி செய்தார் சிவகார்த்திகேயன் எப்படி அந்த ஏலியனை பார்த்தார் என்பதுதான் படத்தின் கதை.

பொதுவாக ஏலியன் தொடர்பான கதைகள் ஹாலிவுட் திரைப்படத்தில் மிகவும் பிரபலம் இன்னும் சொல்லப்போனால் ஏலியன் என்றாலே ஹாலிவுட் திரைப்படம் தான் என பலரும் நினைத்துக் கொள்வார்கள் ஆனால் தமிழில் அத்தகைய படங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான் அதற்கான முயற்சியை கையில் எடுத்து படமாகக் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் ரவிக்குமார். எங்களாலும் ஏலியன் கதையை எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார்கள் பட குழு.

நாம் யூகிக்கவே முடியாத கதை என்றாலும் அதை விறுவிறுப்பாக கொண்டு செல்வது இயக்குனரின் திறமை தான் படத்தின் தொடக்க காட்சிகள் சற்று நீளமாக இருந்தாலும் அதன் பிறகு மெதுவாக படம் வேகம் எடுக்கிறது அதேபோல் ஆறு வருடத்திற்கு முன்பு படம் எடுக்கப்பட்டதால் அப்பொழுது சிவகார்த்திகேயனின் சாயல் கொஞ்சம் படத்தில் தெரிகிறது ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு அவரின் பழைய நடிப்பை பார்க்க முடிகிறது.

தனுஷின் கேப்டன் மில்லர் திரையில் மிரட்டி விட்டதா.? இல்லையா.? இதோ விமர்சனம்…

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் படத்தில் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது சில காட்சிகள் வருகிறார் பின்பு திடீரென காணாமல் போகிறார் காட்சிகளுக்கு இடையிலான தொடர்ச்சியில் அவரை காண முடியவில்லை அது மட்டும் இல்லாமல் கருணாகரன், யோகி பாபு, பாலா சரவணன், பானுப்ரியா ஆகியோர்களும் நடித்துள்ளார்கள் ஏலியனுடன் இவர்கள் நடிக்கும் லூட்டி வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

அதேபோல் பட குழு படம் முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை நம்பி இறங்கியுள்ளது அதனை நாம் கண்குளர பார்க்க முடிகிறது அதற்கேற்ற சரியான உழைப்பை அவர்களும் கொடுத்துள்ளார்கள் கிராபிக்ஸ் குழு திரையரங்கில் ரசிகர்களை தோய்வு அடைய செய்யாமல் தக்க வைத்துள்ளது படக்குழு.

எம்ஜிஆருக்கு பிடித்த விஜயகாந்த் படம்.. அட இதுவா.?

அதேபோல் ரஹ்மானின் இசை நிரோஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஆறுதல் தான் பாடல்கள் எந்திரனின் சாயலை கொண்டிருந்தாலும் ஓரளவு ரசிக்கும்படி இருந்தது டாட்டூ என்ற பெயரில் வரும் ஏலியனுக்கு குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் சித்தார்த். பழக்கப்பட்ட குரலாக இருந்தாலும் அனைவரையும் கவரும் வகையில் அது இருந்துள்ளது அதேபோல் வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவில் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளது படக்குழு.

திரைக்கதை முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருப்பது படத்திற்கு பலவீனம் தான் நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே உள்ள சுவாரசியத்தை இன்னும் அதிகமாக காட்டி இருக்கலாம் என தெரிகிறது இருந்தாலும் பொங்கல் பண்டிகையை ஏமாற்றாமல் குழந்தைகளுக்கு ஏற்ற திரைப்படமாக அயலான் திரைப்படம் அமைந்துள்ளது.