ayalaan alien character : ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் நிரோஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் என பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
படத்தில் ஏலியன் கதாபாத்திரம் வருவதால் வி எப் எக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனை சமீபத்தில் வெளியான அயலான் டீசரில் நாம் பார்த்து உள்ளோம். அதுமட்டுமில்லாமல் இந்த ஏலியன் சும்மா வந்துட்டு பயம் காட்டிட்டு போறது போல இருக்காது படம் முழுக்க ஏலியன் காட்சி வரும் என கூறியுள்ளார்கள் அதேபோல் ஏலியனுக்கு காமெடி காட்சிகளும் எமோஷனல் காட்சிகளும் இருக்கிறது.
இது குறித்து வி எப் எக்ஸ் சூப்பர்வைசர் கூறியதாவது முதலில் கதையில் 2 ஏலியன்கள் இருப்பது போல் இருந்தது பிறகு அதனை ஒரு ஏலியனாக மாற்றினோம். இந்த திரைப்படத்தை 8 வருடத்திற்கு முன்பே ஆரம்பித்து விட்டோம் அதுமட்டுமில்லாமல் இதுவரை காட்டிய ஏலியன் போல் இந்த திரைப்படத்தில் காட்டக்கூடாது என முன்னாடியே முடிவு செய்து படத்தில் வேலை செய்ததாக கூறியிருந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து யோகி பாபு, ரகுல் பிரீத் சிங், கருணாகரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் மையக்கரு ஏலியன் என்பதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது படக்குழு.
இந்த நிலையில் அயலான் திரைப்படத்தில் ஏலியனாக நடித்துள்ளவர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது என்னதான் vfx-ல் ஏலியனை பிரமாண்டமாக காட்டியிருந்தாலும் அதிலும் ஒரு நடிகர் நடித்த தான் பிறகு எடுக்கப்பட்டது அவருடைய பெயர் வெங்கட் செங்குட்டுவன் இதோ அவரின் புகைப்படம்.