வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர்தான் விக்னேஷ் சிவன் இவரது இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளியானாலும் இவர் மிகவும் புகழ்பெற்று விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் அந்த வகையில் இவரது இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி,நயன்தாரா,சமந்தா என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பிரபலங்கள் நடிப்பதால் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள் விஜய் சேதுபதி நடிப்பில் எந்த திரைப்படம் உருவானாலும் அந்தத் திரைப்படத்திற்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
அதேபோல் சமந்தா சமீபத்தில் தனது பிறந்த நாளை இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது அப்பொழுது எடுத்த புகைப்படங்களை கூட நாம் சமூக வலைதள பக்கங்களில் பார்த்திருக்கலாம்.இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புதிய வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஆம் விஜய்சேதுபதி,நயன்தாரா,சமந்தா என மூவரும் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்து வருகிறார்கள் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை பார்த்த ஒரு சில ரசிகர்கள் விஜய் சேதுபதி நயன்தாராவின் பின்னாடி நிற்கிறார்.
சமந்தா , நயன் , சேதுபதி🖤#KaathuVaakulaRenduKaadhal pic.twitter.com/PojHejClPM
— மார்லே🇵🇸 (@Yuvan____) August 23, 2021
இதனை வைத்துப் பார்க்கும் பொழுது விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நயன்தாராவை தான் காதலித்து வருவதாக தெரிகிறது என கூறி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய இருவருமே ஒரே புடவையில் இருப்பதால் இது எந்த மாதிரி காட்சி என்பது மட்டும் தெரியவில்லை தெரிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.