மண்டை குடைச்சல் இயக்குனருடன் இணையும் எஸ் ஜே சூர்யா..! ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் பஞ்சம் கிடையாது..!

sj-surya
sj-surya

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் எஸ் ஜே சூர்யா. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அஜித் போன்ற நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபகாலமாக இயக்கத்தில் ஆர்வம் காட்டுவதை விட நடிப்பில் தான் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை. இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியது மட்டுமில்லாமல். மீண்டும் எஸ் ஜே சூர்யா அவர்கள் பிரபல இயக்குனர் நடிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.  அவர் வேறு யாரும் கிடையாது  இயக்குனர் மிஷ்கின் தான் இவர் தற்சமயம் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா,பூர்ணா, விஜய் சேதுபதி போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்து இருப்பது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது மேலும் இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

mishkin-1
mishkin-1

அந்தவகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு எஸ்எஸ் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் இத்திரைப்படத்தில் தயாரிப்பாளராக முருகானந்தம் அவர்கள் தயாரிக்க உள்ளார்.