எம்ஜிஆர் சிவாஜி கணேசன் காலத்திலிருந்து இன்று வரை நான்கு தலைமுறைகளாக படத்தை தயாரித்து வரும் நிறுவனம் என்றால் அது ஏவிஎம் நிறுவனம் தான். இந்த நிறுவனம் நான்கு தலைமுறைகளாக முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது.
ஆனால் ஒரு சில காலக்கட்டத்தில் ஏவிஎம் நிறுவனம் எந்த ஒரு திரைப்படத்தையும் தயாரிக்காமல் மௌனம் காத்து வந்தது இந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தை தயாரிப்பதற்கு களமிறங்கியுள்ளது.
ஏவிஎம் நிறுவனம் மற்றும் சோனி லைவ் நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து புதிய வெப் தொடரை தயாரிக்க இருக்கிறார்கள் அந்த வெப் தொடரை ஈரம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் தான் இயக்க இருக்கிறார் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏவிஎம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.
இதற்கு பல திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வெப் சீரியஸ் நீண்டகாலமாக திரைஉலகில் அழிக்கமுடியாத திரைப்படத் திருட்டு கும்பலை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது. தமிழ் ஸ்டாக்கர்ஸ் என்ற தொடர் உருவாகி வருவதாகவும் சோனி OTT தளத்தில் இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
இதோ அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
@ProductionsAvm ventures into #OTT arena
Joining hands with @SonyLIV @dirarivazhagan#TamilStalkers inspired from real-life film piracy group deep dives into the dark side of the world of piracy#AVM#ArunaGuhan#AparnaGuhanShyam@onlynikil pic.twitter.com/Ua3L11WC4f
— AVM Productions (@ProductionsAvm) March 24, 2021