தனுஷிக்கு வாழத்து சொன்ன அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்கள்.! கொண்டாடும் ரசிகர்கள்.

dhanush
dhanush

சமிப காலமாக நடிகர் தனுஷ் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதை களமாக இருப்பதால் படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றன. மேலும் அந்த படத்திற்கு ஏற்றவாறு தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்துவதால் தனுஷ் பட்டிதொட்டி பிரபலம் அடைந்து உள்ளார்.

தனுஷ் தமிழையும் தாண்டி தற்பொழுது ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என எல்லாவற்றிலும் கால் தடம் பதித்து வெற்றியை கண்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கர்ணன் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் உடன் முதல் முறையாக இணைந்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த படம் 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் வேற லெவலில் போனது. தற்போது படம்  இன்று வெளியாகி உள்ளது சில தினகளுக்கு முன் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி மற்றும் ஜோ ரூசோ இவர் அடுத்ததாக கிரே மேன் என்ற படத்தை எடுத்து வருகின்றனர்.

இந்த படத்தில் தனுஷ் நடித்து உள்ளார். இந்த நிலையில் அந்தோனி மற்றும் ஜோ ரூசோ தனுஷின் ஜெகமே தந்திரம்  படத்திற்கு தனது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.