தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவர் சூர்யா. இவர் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் ஜெய் பீம், எதற்கு துணிந்தவன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சூர்யா வணங்கான் திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே பிரச்சனைகள் வர அந்த படத்தில் இருந்து தன்னையும், 2d தயாரிப்பு நிறுவனத்தையும் விலகினார். இதனை எடுத்து உடனேயே சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து தனது 42வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் ஒரு சங்க காலத்து படமாக உருவாகி வருகிறது.
படத்தில் திஷா பட்டாணி, கோவை சரளா என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யா 42 படம் வெளிவருவதற்கு முன்பாகவே 400 கோடிக்கு மேல் பிசினஸ் செய்ததாக தகவல்கள் எல்லாம் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா பிரபலம் தனஜெயன் அண்மையில் பேட்டி ஒன்றில் சூர்யா 42 திரைப்படம் குறித்து பேசி உள்ளார்.
அதில் அவர் சொன்னது சூர்யா 42 திரைப்படம் குடும்ப எண்டர்டெயின்மென்ட் திரைப்படம் கிடையாது முழுக்க முழுக்க ஆக்சன் பேக் திரைப்படமாக உருவகி வருவதாக கூறியுள்ளார். சூர்யா 42 ஹாலிவுட் தரத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருவதாகவும், காட்சிகள் ஒன்று மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாக கூறினார் இந்த படத்தின் சிஜிஏ ஒர்க்கை “வீட்டா ஆப் க்ஸ்” நிறுவனம் தான் செய்கிறதாம்..
இந்த நிறுவனம் இதற்கு முன்பாக கிங் காங், டெட்பூல், அவெஞ்சர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு வேலை பார்த்து உள்ளதாம் இதனால் சூர்யா 42 திரைப்படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கும் எனவும் ஹாலிவுட் ஸ்டைலில் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டு தீ போல பரவி வருகிறது.