தமிழ்நாடு ரசிகர்கள் தமிழ் படங்களையும் தாண்டி பிறமொழி படங்களையும் பார்த்துக் கொண்டாடுவார்கள் அந்த வகையில் ஹாலிவுட், கொரியா மற்றும் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என சொல்லிக் கொண்டே போகலாம் அதிலும் குறிப்பாக ஹாலிவுட் படங்களை பார்க்கவே தமிழ் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 திரைப்படம் தற்போது வெளிவந்து உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அவதார் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய ஒரு வசூல் சாதனை படைத்தது அதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் வெளிவரும் எனக் கூறியது.
ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து வந்த நிலையில் ஒரு வழியாக பல வருடங்கள் கழித்து இரண்டாவது பாகம் ஒன்று மூன்றாவது பாகத்தை எடுத்தது. இரண்டாவது பாகம் தற்போது உலகம் முழுவதும் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது முதலில் 15 நாடுகளில் இந்த படம் ரிலீஸ் ஆனது அதற்கு அடுத்த நாள் உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது
தற்போது வரை இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது இந்த படத்தில் வரும் நீருக்கு அடியில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது மேலும் அந்த காட்சிகள் தற்போதும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது
என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் 4 நாட்களில் 5000 கோடி வரை வசூலித்து இருக்கிறதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரித்து ஒரு இமாலய சாதனையை படைக்கும் என சொல்லி வருகின்றனர்.