2022 ஆம் ஆண்டு சினிமாவிற்கு நல்ல ஆண்டாக இருந்து வந்துள்ளது. பெரிய பட்ஜெட் தொடங்கி சின்ன பட்ஜெட் வரை பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன அந்த லிஸ்டில் இணைந்துள்ளது தான் அவதார் 2. ஹாலிவுட் பல பேட்டரி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் ஜேம்ஸ் கேமரூன்
இவர் அவதார் என்னும் படத்தை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்லாயிரம் கோடியில் லாபம் பார்த்தது இதனை தொடர்ந்து அவதார் இரண்டாம் பாகம் மூன்றாவது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஒரு வழியாக கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டார். முதல் பாகத்தை விட சிறப்பாக இந்த இரண்டாவது பாகம் இருந்தது காரணம் இந்த படத்தில் தண்ணிக்கு அடியில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது மேலும் கதை சற்று வித்தியாசமாகவும் இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்தனர்.
அதன் காரணமாக அவதார் 2 திரைப்படம் நல்ல வசூலை அனைத்து இடங்களிலும் அள்ளியது. இந்தியாவில் மட்டுமே அவதார் 2 திரைப்படம் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது மற்ற இடங்களிலும் நல்ல வசூலை அள்ளியது இதுவரை மட்டுமே அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1.2 பில்லியன் வசூலித்துள்ளதாம்.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சொன்னது என்னவென்றால். அவதார் 2 திரைப்படம் 2 பில்லியனுக்கு அதிகமாக வசூல் செய்தால் மட்டுமே break even என மறைமுகமாக சொல்லி உள்ளார். இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது